அமெரிக்காவில் இருக்கும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் டிரம்ப் அரசு, பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருப்பக்கம் புதிதாக விசா பெறுவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்த கல்வி தகுதி, சம்பள அளவு, விசா கட்டணம் போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் வேளையில்...
மறுபுறம் அமெரிக்காவில் தற்போது விசாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டவர்களையும், வெளிநாட்டு மாணவர்களையும் கட்டம் கட்டி அடித்து வருகிறது டிரம்ப் தலைமையிலான அரசு. சிறு குற்றங்களில் ஈடுப்பட்ட வெளிநாட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது தற்போது அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
ஆம், அமெரிக்கா அரசு 2025ஆம் ஆண்டில் மட்டும் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளது, இதில் ஹெச்1பி விசா மட்டுமில்லை, மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட விசா, தற்காலிக வேலைவாய்ப்பு விசா, டிபெண்டன்ட் விசா உட்பட அனைத்தும் அடக்கும். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை (State Department) அதிகாரி தெரிவித்தபடி, இந்த நடவடிக்கை அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத வெளிநாட்டவரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்காமல் தடுக்கவும் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு விசா ரத்து செய்யப்பட்டதில் சுமார் 8000-க்கும் மேற்பட்ட ஸ்டுடென்ட் விசாக்கள் (F-1) ரத்து செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அளவு அதிகம். இந்த நடவடிக்கை மூலம் வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் விசா ரத்து செய்யப்பட பிரதான காரணங்கள் DUI அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சக மக்களை தாக்குவது, திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களே அதிகம். இந்த மூன்று காரணங்கள் மட்டுமே இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட 85000 விசாக்களில் 50 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது.
இதோடு விசா காலாவதி ஆகியும் அமெரிக்காவில் இருப்பவர்கள், தீவிரவாத அமைப்பு ஆதரவு அளிப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் போன்ற காரணங்களுக்காகவும் விசா ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் பொது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறுகின்றனர், இதேவேளையில் சமூக ஊடகங்களில் இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக கடுமையாத விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
காசா போருக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது ஆன்டி செமிட்டிசம் (யூத எதிர்ப்பு) அல்லது தீவிரவாத ஆதரவு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு விசா ரத்து செய்யப்பட்டு வருகிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து மாணவ விசாக்களில் இருப்பவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக IANS அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஜூன் மாதத்தில் அமெரிக்க தூதரகங்களுக்கு அரசு வெளியிட்ட உத்தரவில், அமெரிக்க மக்கள், அமெரிக்க கலாச்சாரம், அரசு அல்லது நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளை கொண்ட மாணவ விசா விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் சோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் 55 மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை தொடர்ந்து சோதனை செய்யும் புதிய உத்தரவும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவரையும், விசா விண்ணப்பம் செய்பவரின் சமுக ஊடக பக்ககளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு படிப்பதற்காகவும், வேலை செய்வதற்காகவும் செல்கின்றனர். இந்த விசா ரத்துகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவை பலரின் அமெரிக்க கனவுகளை பறிக்கின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications