அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவர் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆறு இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார்.
பொருளாதார தடை: அமெரிக்க அரசு இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய், மெத்தனால் உள்ளிட்ட பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கும் 20 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. இதில் ஆறு நிறுவனங்கள் இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுபவை ஆகும்.

அமெரிக்கா கட்டுப்பாடு: ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில் இந்த நிறுவனங்கள் அந்த கட்டுப்பாடுகளை மீறி ஈரானிடம் இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி இருக்கிறது .
இந்தியாவை சேர்ந்த 6 நிறுவனங்கள்: இவ்வாறு அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதித்திருக்கக்கூடிய ஆறு இந்திய நிறுவனங்களுமே இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் பிரதானமாக செயல்படக்கூடிய நிறுவனங்களாகும் . மொத்தம் 220 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் Alchemical Solutions Private Limited நிறுவனம் தான் பெரிய பாதிப்பை சந்திக்க இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஈரானிடம் இருந்து 84 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கி இருக்கிறது.

ஈரானிடம் எண்ணெய் வாங்கியதற்கு தண்டனை: Global Industrial Chemicals Limited நிறுவனமும் இந்த பொருளாதார தடையில் சிக்கி வைக்கிறது. இந்த நிறுவனம் மெத்தனால் உள்ளிட்ட 51 மில்லியன் டாலர்கள் மதிப்பள்ள பெட்ரோ கெமிக்கல் பொருட்களை கடந்த 2024 ஜூலையிலிருந்து 2025 ஜனவரி வரையிலான ஆறு மாதத்தில் ஈரானிடம் இருந்து வாங்கி இருக்கிறது. Jupiter Dye Chem Private Limited ஈரானிடம் இருந்து 49 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெயை கொள்முதல் செய்திருக்கிறது.
பொருளாதார தடை விதிப்பு: Ramniklal S Gosalia and Company நிறுவனம் மெத்தனால் உள்ளிட்ட 22 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்திருக்கிறது . Persistent Petrochem Private Limited நிறுவனம் 22 மில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல் பொருட்களை ஈரானிடம் வாங்கி விற்பனை செய்துள்ளது. Kanchan Polymers நிறுவனம் ஈரானிடமிருந்து 1.3 மில்லியன் டாலர் மதிப்பிலான பாலித்தீன் பொருட்களை இறக்குமதி செய்து இருக்கிறது.
அமெரிக்காவில் சொத்துக்கள் முடக்கம்: இந்த ஆறு நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்கா அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இந்த ஆறு நிறுவனங்களோடு எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவித்திருக்கிறது.
ஈரானுடன் மோதல்: ஈரான் தங்களின் கச்சா எண்ணெய், பாலிதீன், மெத்தனால் உள்ளிட்ட பொருட்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தை கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவை பொறுத்த வரை வரலாற்று ரீதியாகவே ஈரானுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கிறது . 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததற்கு பிறகு இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா மட்டும் இன்றி துருக்கி, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ,உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருக்கிறது.
More From GoodReturns

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

ஈரான் இனி தலைதூக்கவே முடியாது; ஆட்சியிலும் ராணுவத்திலும் பிளவு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஈரான் போர் விவகாரத்தில் 19 இந்தியர்கள் கைது!!



Click it and Unblock the Notifications