நேற்று சீனா இன்று ரஷ்யா.. டிரம்ப்-ன் வெறியாட்டம்.. இந்தியாவுக்கு புதிய பிரச்சனை..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு வாயிலாகவும், வர்த்தக தடைகள் வாயிலாகவும் உலகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் நம்புகிறார். நேற்று சீனா மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான அடுத்த சில மணிநேரத்தில் ரஷ்யா எண்ணெய் நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதித்து இந்தியாவுக்கு புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது அமெரிக்க டிரம்ப் நிர்வாகும்.

டிரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு லேப்டாப் முதல் ஜெட் இன்ஜின்கள் வரை அமெரிக்க மென்பொருள் மூலம் இயங்கும் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியானது. இது, சீனாவின் அரிய உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக அமையும் என்று அமெரிக்கா நம்புகிறது.

நேற்று சீனா இன்று ரஷ்யா.. டிரம்ப்-ன் வெறியாட்டம்.. இந்தியாவுக்கு புதிய பிரச்சனை..!!

இந்த செய்தி வெளியான அடுத்த சில மணிநேரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு புதிய தடைகளை அறிவித்துள்ளது.

அமெரிக்கை உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புக்கு முக்கியமான காரணம் புதின்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை நிறுத்த டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் திட்டமிடப்பட்ட சந்திப்பு நடக்காத காரணத்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பு இனி நடக்காது என அறிவித்து இத்திட்டத்தை ரத்து செய்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்தில் Rosneft மற்றும் Lukoil மீது தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து புதன்கிழமை இரவு, கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்தது. வியாழக்கிகிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.25 டாலர் உயர்ந்து ஒரு பேரலுக்கு 65.84 டாலர்களை எட்டியது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 3.25 டாலர் அதிகரித்து 61.75 டாலர்களாக உயர்ந்துள்ளது.

புதன் மற்றும் வியாழக்கிழமை நாளில் பிரெண்ட் கச்சா எண்ணெய், WTI கச்சா எண்ணெய் சுமார் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் தடையால் உலகளாவிய விநியோக சந்தையில் ரஷ்ய எண்ணெயின் சப்ளை குறைந்து கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற அச்சத்தால் உயர்ந்துள்ளது.

இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஏற்கனவே அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட பல நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை மெல்ல மெல்ல குறைப்பதாக முடிவு செய்துள்ளது.

தற்போது Rosneft மற்றும் Lukoil மீது விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும் பாதிப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+