இந்தியா மீது 100% வரி போடும் அமெரிக்க.. டிரம்ப்-க்கு கிடைத்த புது ஆயுதம்.. ரஷ்யாவை விட்டுக்கொடுக்க முடியாது!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடி வரும் வேளையில், டிரம்ப்க்கு தற்போது புது ஆயுதம் கிடைத்துள்ளது. நேற்று நடந்த அமெரிக்க செனேட் கூட்டத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடை வதிக்கும் 2026 Lindsey O. Graham மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது.

இந்த மசோதா ஒப்புதல் பெற்றது மூலம் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரையிலான வரி விதிக்கும் அதிகாரம் டிரம்ப்க்கு கிடைக்கும்.

 இந்தியா மீது 100% வரி போடும் அமெரிக்க.. டிரம்ப்-க்கு கிடைத்த புது ஆயுதம்.. ரஷ்யாவை விட்டுக்கொடுக்க முடியாது!

இந்த மசோதா இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும், ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து டாப் 3 இடங்களில் இருந்து வரும் வேளையில் டிரம்ப் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்குகள் விலை உயரும், இதனால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்திய தயாரிப்புகளை விடுத்து மற்ற நாடுகளிடம் இருந்து வாங்க துவங்கும்.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த Global Trade Research Initiative அமைப்பு மத்திய அரசுக்கு முக்கியமான ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிக்கும் மிரட்டலை கண்டு இந்தியா தனது எரிபொருள் கொள்முதல் திட்டத்தை மாற்றி அமைக்க கூடாது. தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் மலிவான விலையிலான ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் செனேட்டில் மசோதா 86-11 வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் பெற்றதால் உடனே 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பது இல்லை, இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றாலே சட்டமாக மாறும். எனவே வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்ற ஆய்வுக்கு வருகிறது.

சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் அல் மண்டெப் நிரீணை ஆகிய இரண்டிலும் போர் வெடித்த போது இவ்வழித்தடத்தில் வர்த்தகம் முடங்கியுள்ள காரணத்தால் ஆசியாவுக்கு மொத்த சப்ளையராக மீறியது ரஷ்யா. இதை பணமாக்கும் முயற்சியில் ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகர்கள், இதுநாள் வரையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த டிஸ்கவுண்ட்டை ரத்து செய்தது குறிப்பிட்டத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+