இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் இந்த ஏஐ சூறாவளியில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற இலக்கில் பல மாற்றங்களை செய்து வர்த்தகத்தையும், நிறுவனத்தையும் காப்பாற்றி வருகிறது.
இப்படியிருக்கும் வேளையில் அமெரிக்க அதிபரான டிரம்ப் ஹெச்1பி விசா மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ஐடி சேவை துறைக்கு ஒட்டுமொத்தமாக செக் வைத்தார். ஹெச்1பி விசா மீதான 1 லட்சம் டாலர் கட்டணம், லாட்டரி முறை நீக்கம் ஆகியவை 2026ல் இருந்து தான் துவங்குகிறது என்றாலும் இந்திய ஐடி நிறுவனங்களின் நீண்ட கால திட்டங்களில் பெரிய அடி வழுந்துள்ளது.

இந்த மோசமான அறிவிப்புகளுக்கு பின்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்களை டிசிஎஸ் இந்த வாரம் எதிர்கொள்கிறது, இந்த வாரம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை டிசிஎஸ் வெளியிட உள்ளது. இதற்கு மத்தியில் அமெரிக்க அரசியல் பெரும் புள்ளிகள் அதாவது சென்னேட்டர்கள் டிசிஎஸ்-யிடம் பல முக்கியமான தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் இந்திய ஐடி சேவை துறைக்கு பெரும் நெருக்கடியாக மாறலாம். இப்படி என்ன கேட்கப்பட்டது, இந்திய ஐடி நிறுவனங்களின் 40-50 சதவீத வர்த்தகம் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் காரணத்தால் ஒவ்வொகு நிகழ்வும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க சென்னேட்டர்கள் டிசிஎஸ் நிறுவனத்திடம் அமெரிக்காவில் எப்படி ஊழியர்களை தேர்வு செய்யப்படுகிறார்கள்..? ஹெச1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரும் இந்திய மற்றும் பிற நாட்டு ஊழியர்களை வைத்து அமெரிக்கர்களின் பிணியிடங்கள் நீக்கப்படுகிறதா..? மேலும் ஹெச்1பி விசா மூலம் வரும் ஊழியர்களுக்கும், அமெரிக்க ஊழியர்களுக்கும் இருக்கும் சம்பள வித்தியாசம் எவ்வளவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளனர்.
டிசிஎஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் உலகளவில் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதுய. இதில் அமெரிக்க ஊழியர்களும் அடங்குவர் என்பதால் அமெரிக்க செனேட்டர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு உள்ளனர்.
அமெரிக்க செனட் ஜூடிஷியரி கமிட்டியின் தலைவர் சார்லஸ் கிராஸ்லி மற்றும் துணை தலைவர் ரிச்சர்ட் டர்பின் ஆகியோர் டிசிஎஸ் பணிநீக்கம் நீக்கும், ஹெச்1பி விசா மூலம் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பாக கடுமையாக கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருதிவாசன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சார்லஸ் மற்றும் ரிச்சர்ட் இக்கேள்விகளை கேட்டுள்ளனர். இக்கேள்விகளை கேட்ட முக்கிய காரணம், டிசிஎஸ் சமீபத்தில் அமெரிக்காவில் செய்த பணிநீக்கம் தான்.
டிசிஎஸ் நிறுவனத்தில் அமெரிக்க வர்த்தகத்தில் பணியாற்றும் அமெரிக்க ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் Jacksonville அலுவலகத்தில் பணியாற்றி வரும் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையின் மூலம் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க செனேட்டர்கள் அனுப்பிய கடித்ததில், டிசிஎஸ் நிர்வாரம் அமெரிக்க ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் அதேவேளையில், ஹெச்1பி விசா மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர விண்ணப்பம் செய்துள்ளீர்கள் எனவும் கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications