அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் அரசு இது நாள் பிற நாடுகளுக்கு தான் பிரச்சனை கொடுத்து வந்தது, ஆனால் தற்போது அந்நாட்டு மக்களுக்கே பிரச்சனை உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய ஒரு மசோதா ஒப்புதல் பெற முடியாமல் இருப்பது மூலம் 100000 அரசு ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான புதிய செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் நாடாளுமன்றத்தில் இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் டிரம்ப் அரசு புதன்கிழமை வெளியிட்ட மெமோவில் செலவுத் திட்டங்கள் தொடர்பான பிரச்சனையால் அரசு ஷட்டவுன் நிலையை நெருங்கும் சூழலில் இருப்பதாகவும், அனைத்து அரசு துறைகளும் பெரிய அளவிலான பணிநீக்கங்களுக்கு தயாராக இருக்குமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், அக்டோபர் 7 அன்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை இழக்கலாம். இது, அமெரிக்க வரலாற்றில் பெரும் அளவிலான பணிநீக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், செலவின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு ஷட்டவுன் ஏற்படும். இதன் விளைவாக, பல அமைச்சகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை இழக்கலாம். டிரம்ப் அரசு, இந்த சூழலைப் பயன்படுத்தி, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை அமல்படுத்த முயல்கிறது.
அமெரிக்க அரசின் கீழ் சுமார் 24 லட்சம் ஊழியர்களின் வேலை செய்யும் நிலையில், இவர்களின் பணியின் பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. செலவின மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் முதல் ஆட்சியில் இதேபோன்ற ஷட்டவுன் நடந்தது. 2018 சுமார் 35 நாட்கள் இந்த shutdown நீடித்தது, அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட ஷட்டவுன் ஆக இந்த சம்பவம் அமைந்தது, இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஷட்டவுன் உருவாக உள்ளது.
அப்போது 3,80,000 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர், 4,20,000 ஊழியர்கள் சம்பளம இல்லாமல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவானது. இந்த 2018 ஷட்டவுன் அப்போதைய காலக்கட்டத்தில் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார இழப்புகளையும், அரசு சேவை தடைகளையும் ஏற்படுத்தியது.

பிரச்சனைக்கு மூலக்காரணம்
செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைவதால், டெமாக்ரடிக் கட்சியினருக்கும், ரிபப்ளிக் கட்சியினருக்கும் இடையில் நிதி மசோதா குறித்து கருத்து வேறுபாடுகள் நீடித்துவருகின்றன.
மலிவு விலை காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் சுகாதாரக் காப்பீடுக்கான தற்காலிக வரிச் சலுகைகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று டெமாக்ரடிக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இந்த மானியங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுக்கான செலவுகள் குறையும் என்று கருதுகின்றனர். ஆனால் இதற்கு அரசின் நிதி பயன்படுத்தப்படுகிறது.
ரிபப்ளிக் கட்சியினர், எந்தவித முக்கிய கொள்கை மாற்றங்களும் இல்லாமல், தற்போதைய நிதி அளவுகளை நீட்டிக்கும் ஒரு தற்காலிக, செலவின மசோதாவை நிறைவேற்ற விரும்புகின்றனர். இதில், சுகாதாரத் துறை மானியங்கள் உள்ளிட்ட வேறு எந்தப் பிரச்சினைகளையும் சேர்க்கக் கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த முடிவு டெமாக்ரடிக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் நிராகரிக்கப்பட்டன.பிரதிநிதிகள் சபை ரிபப்ளிக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மசோதாவை நிறைவேற்ற, செனட் சபையில் உள்ள டெமாக்ரடிக் கட்சியினரின் ஆதரவு தேவைப்படுவதால் இந்த மசோதா ஒப்புதல் பெறுவதில் தாமதம் நிலவுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications