டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியா மீது விதித்திருந்த 25 சதவீத ரெசிப்ரோக்கல் வரி மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை கடைசி நேரத்தில் ரத்து செய்யும் அல்லது சீனாவுக்கு கொடுத்த கால அவகாசம் போல் 90 நாட்கள் தற்காலிக நிவாரணம் அளிக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.
அமெரிக்க அரசு திங்களன்று இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட வரைவு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருப்பதால், இந்தியா மீதான வரி விதிப்பை அமெரிக்கா தொடர முடிவு செய்துள்ளது. டிரம்ப் - புடின் மத்தியிலான பேச்சுவார்த்தையில், இந்தியா மீதான வரி விதிப்பது முக்கிய நெருக்கடியாக அமெரிக்கா ரஷ்யாவுக்கு காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த 50 சதவீத வரி உயர்வு, ஆகஸ்ட் 27, 2025 அன்று இரவு 12:01 மணிக்கு அமெரிக்காவுக்குள் நுழையும் அல்லது கிடங்கிலிருந்து வர்த்தகத்திற்கு வெளியேற்றப்படும் இந்தியப் பொருட்களுக்கு பொருந்தும் என்று அமெரிக்க அரசு தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாத தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தார். இதற்கான இறுதி நாளாக ஆகஸ்ட் 27ஐ நிர்ணயித்திருந்தார். ஆனால் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது குறித்து எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.
ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரலாம் என அமெரிக்கா நம்புகிறது. இதனாலேயே ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதை இரண்டாம் நிலை வரிகள் அல்லது அபராத நடவடிக்கைகள் என அமெரிக்கா அழைக்கிறது.
அமெரிக்கா நேற்று வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கார், வாகனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பார்மா, அலுமினியம், ஸ்டீல், இரும்பு பொருட்கள், காப்பர் பொருட்களுக்கு இந்த 50 சதவீத வரி விதிப்பில் இருத்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய அரசின் கண்டனம்
இந்திய அரசு இந்த வரி 50 சதவீத உயர்வை அநியாயமானது எனக் கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தை வெறும் கச்சா எண்ணெய் சர்ச்சையாக காட்டுவது தவறு என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா வரி விதிக்காத நிலையில் இந்தியா மீது மட்டும் விமர்சனமும், வரியும் முன்வைக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு, எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உரிமையை எங்களின் சொந்த முடிவு என தெரிவித்துள்ளார். இதனால், இந்த 25 சதவீத கூடுதல் வரி அதாவது ரெசிப்ரோக்கல் வரியுடன் சேர்ந்து 50 சதவீத வரி சர்வதேச வர்த்தக உறவுகளில் புதிய பதற்றங்கள் உருவாகலாம்.
பிரதமர் மோடி அதிரடி
இதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை, இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களின் நலன்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்தார். அமெரிக்காவின் 50 சதவீத வரி அச்சுறுத்தல் அதிகரித்தாலும், அதைச் சமாளித்து முன்னேறுவோம் என அவர் கூறினார்.
அகமதாபாத்தில் பல்வேறு நகர வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பேசிய நரேந்திர மோடி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறு தொழில்களின் நலன் எங்களுக்கு முதன்மையானது என தெரிவித்தார்.
More From GoodReturns

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications