மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் திட்டமிட்டு ஈரான் ராணுவ தளங்களையும், அந்நாட்டு தலைவர்கள் இருக்கும் இடத்தையும் டார்கெட் செய்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்காக அமெரிக்க ஒவ்வொரு வாரத்திற்கும் பல பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்து வருகிறது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பிய பின்னரும் டிரம்ப் இப்போரை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஈரான் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் மொத்தமாக நீக்க அமெரிக்க அரசு மிகப்பெரிய Bounty திட்டத்தை அறிவித்துள்ளது.

அதாவது ஈரான் நாட்டின் புதிய உயர் தலைவர் குறித்து இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல் வழங்குவோருக்கு பெரிய தொகையை பரிசா வழங்குவதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.
அமெரிக்கா, ஈரானின் புதிய உயர் தலைவரான Mojtaba Khamenei குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 92 கோடி ரூபாய் வரையிலான பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது போர் தொடங்கிய பிறகு அமெரிக்கா மேற்கொண்ட மிக முக்கியமான உளவுத்துறை நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதேபோன்ற அறிவிப்பை அமெரிக்கா பல முறை அறிவித்துள்ளது, இதன் மூலம் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"Rewards for Justice" திட்டம்
இந்த பரிசு அறிவிப்பு அமெரிக்க வெளியுறவு துறையின் Rewards for Justice என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் உலகளவில் பயங்கரவாத நெட்வொர்க்-ஐ உடைக்க அல்லது அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காண உதவும் தகவல்களை வழங்குவோருக்கு நிதி பரிசு வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, செயல்படுத்தக்கூடியதாக இருந்தால் அதிகபட்சமாக 10 மில்லியன் டாலர் வரை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டார்கெட் ஈரான்
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி மறைந்த நிலையில் அவரது மகன் முஜ்தபா கமேனி தற்போது ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் இவர் ஆட்சிக்கு வந்த பின்பு ஈரான் படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை ஈரானின் புதிய அரசு நிர்வாகத்தை மொத்தமாக டார்கெட் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, ஈரானின் புதிய அதிகார அமைப்பை நேரடியாக குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முக்கிய தலைகள்
அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட பட்டியலில் முஜ்தபா காமெனியுடன் சேர்த்து மேலும் பல உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களும் "Rewards for Justice" திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.
இதில் முக்கியமாக ஈரான் தேசிய பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்காற்றும் Ali Larijani பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் துணைத் தலைமை அதிகாரியான Ali Asghar Hejazi, இராணுவ ஆலோசகரான Yahya Rahim Safavi, உளவுத்துறை அமைச்சரான Esmail Khatib மற்றும் உள்துறை அமைச்சரான Eskandar Momeni ஆகியோரின் பெயர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஈரானின் பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகார அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என அமெரிக்கா கருதுகிறது.
இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா, ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான Islamic Revolutionary Guard Corps (IRGC) அமைப்பின் நெட்வொர்க்-ஐ காலி செய்ய முயற்சித்து வருகிறது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications