அமெரிக்க வெள்ளை மாளிகை ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு சீனா கொடுத்த பதிலடிக்கு, எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசு சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தியுள்ளது.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான இறக்குமதி வரி 245 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு, சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2ஆம் தேதி விடுதலை தினம் என அறிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு விரிவான வர்த்தகக் கொள்கை மாற்றத்தை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அடிப்படையாக 10% இறக்குமதி வரியை அவர் விதித்தார்.
மேலும், அமெரிக்கா அதிக வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு தனித்தனியாக அதிக ரெசிப்ரோக்கல் வரிகளையும் விதித்தார். இந்த நடவடிக்கையானது ஒரு சமமான போட்டிக் களத்தை உருவாக்குவதற்கும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, 75 க்கும் மேற்பட்ட நாடுகள் ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து விலக்கு பெற அமெரிக்கா உடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டின. இதன் விளைவாக, சீனா தவிர மற்ற நாடுகள் விதிக்கப்பட்ட வரிகள் தற்போது பேச்சுவார்த்தைக்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனா, அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் தற்போது 245 சதவீதம் வரையிலான வரியை எதிர்கொண்டு வருகிறது.
மேலும், டிரம்ப் ஸ்டீல் மற்றும் அலுமனியம் மீதான உண்மையான 25% வரியை செயல்பட்ட சட்ட ஓட்டைகளையும், வர்த்தக விலக்குகளையும் நீக்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கைகள் அமெரிக்கத் தொழில்துறையைப் பாதுகாப்பதையும், வெளிநாட்டு போட்டியிலிருந்து உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைசியாக சீனா குறித்து பேசும் போது, என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருவது பெய்ஜிங்கின் கையில் தான் உள்ளது என்று கூறினார். இதைதொடர்ந்து, அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை நடத்த "பயப்படவில்லை" என்றும் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் சீனா புதன்கிழமை உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் தெரிவித்தது.
மேலும் சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் இது குறித்து கூறுகையில், "அமெரிக்கா உண்மையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க விரும்பினால், அமெரிக்கா முதலில் வரி மூலம் அழுத்தத்தை கொடுப்பதை நிறுத்த வேண்டும், இதேபோல் உலக நாடுகளை மிரட்டுவதையும் பிளாக்மெயில் செய்வதையும் நிறுத்த வேண்டும். இரு நாடுகளும் சமம் மற்றும் பரஸ்பர நன்மை பெற வேண்டும் என்ற அடிப்படையில் சீனாவுடன் பேச வேண்டும்" என்று கூறினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு டிரம்ப் 2வது ஆட்சியில் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அமெரிக்கா சீன பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்துள்ளது, இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரிகளை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவது சர்வதேச வர்த்தகத்தில் மேலும் பதட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications