ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருக்கின்றன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வீசி வருகிறது. இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளின் மீதும் ஈரான் ஏவுகணை மழைகளை பொழிந்து வருகிறது.

இதனால் மத்திய கிழக்கில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த போர் எப்போது தான் முடிவுக்கு வருமென எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போதைக்கு இந்த போர் தணிவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என கூறுகிறது, அமெரிக்காவும் இஸ்ரேலும் இதுவரை இல்லாத பெரும்படையையும் தாக்குதலையும் பார்ப்பீர்கள் என்று எச்சரிக்கிறது.

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் அமெரிக்க அரசாங்கம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க் ரூபியோ மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஈரான் ராணுவம் துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வரக் கூட கூடிய சூழலில் அவர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் மத்திய கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய பாதுகாப்புக்கு தான் அரசாங்கம் முன்னுரிமை தருகிறது. https://mytravel.state.gov/s/step என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களுக்காக அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க தூதரங்கள் வெளியிடும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

பாதுகாப்பு கருதி மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளீயேறி விடுங்கள் என தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இதில் கிடைக்கக்கூடிய தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

குறிப்பாக ஈரான் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அரசு பின் வரக்கூடிய நாடுகளில் வசிக்கக்கூடிய அமெரிக்கர்கள் உடனடியாக கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிமுறைகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறி இருக்கிறார்.

இதன்படி

பஹ்ரைன்,

எகிப்து,

ஜார்டன்,

ஈரான்,

ஈராக்,

இஸ்ரேல், காஸா, மேற்குகரை,

குவைத்,

லெபனான்,

ஓமன் ,

கத்தார்,

சவுதி அரேபியா,

சிரியா,

ஐக்கிய அரபு அமீரகம்,

ஏமன்

ஆகிய நாடுகளில் வசிக்கக்கூடிய அமெரிக்கர்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக இந்த நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து வகையான போக்குவரத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி வெளியேற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அரசின் இந்த திடீர் அறிவிப்பு மத்திய கிழக்கில் வசிக்கும் அமெரிக்கர்கள் மட்டுமில்லாமல் மற்ற நாட்டவர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விமானங்கள் எதுவும் இயக்கப்படாத சூழலில் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என ஏராளமானவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருந்தாலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாற்று ஏற்பாடுகளை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+