டிரம்ப் திட்டமிட்டே அமெரிக்க பங்குச்சந்தையை அதளபாதாளத்திற்கு தள்ளுகிறாரா? பகிர் கிளப்பும் தியரி..!!

அமெரிக்க பங்குச் சந்தை இந்த வாரம் துவங்கியதில் இருந்து மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் இந்தியா, ஆசியா, ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் திடீர் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இந்த சரிவை சமாளிக்க டிரம்ப் தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதற்கு பின்னால் சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சொல்லப்போனால் டிரம்ப் திட்டமிட்டே அமெரிக்க பங்குச் சந்தையை அதளபாதாளத்திற்கு தள்ளுகிறார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள காரணத்தால் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு பின்னால் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று Globalists மற்றொன்ரு Tariffs.

டிரம்ப் திட்டமிட்டே அமெரிக்க பங்குச்சந்தையை அதளபாதாளத்திற்கு தள்ளுகிறாரா? பகிர் கிளப்பும் தியரி..!!

Globalists: தற்போதைய பங்குச்சந்தை வீழ்ச்சியில் அதிகம் பேசப்படும் சொற்களில் இந்த Globalists-களும் ஒன்று. இவர்கள் யார் என்பது தெரியாது, இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது, இவர்கள் ஒரு தனிநபர்களும் கிடையாது..? அப்படியானால் யார் தான் இவர்கள்..?

Globalists என்பவர்கள் முதலீட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இவர்களை பெரும் முதலீட்டாளர்கள், பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவினர் என்று கருதலாம். இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியை Globalists-களால் திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை (US Treasury bonds) அதிக அளவில் வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தான் Globalists என டிரம்ப் நிர்வாகம் குறிவைத்துப் பேசுகிறது. அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள FPI முதலீட்டாளர்கள் கொண்ட நாடுகள் என பார்த்தால் சீனா-வை குறிப்பிடலாம். சரி சீனாவுக்கும் தற்போதைய பங்குச்சந்தை சரிவுக்கும் என்ன தொடர்பு என்பதை அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக அளவுகளை வைத்து எளிதாக புரிந்துகொள்வோம்.

பொதுவாகவே அமெரிக்கா சீனாவிலிருந்து அதிக பொருட்களை வாங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த உபரி அமெரிக்க டாலர்களைச் சீனா, அமெரிக்க வங்கிகளில் கருவூலப் பத்திரங்களை வாங்கி முதலீடு செய்கிறது.

அமெரிக்க அரசாங்கம் இந்த வர்த்தக பற்றாக்குறையைக் குறைத்தால் (அதாவது விதிப்பின் மூலம்), சீனாவுக்கு அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்ய டாலர்கள் குறைவாக இருக்கும். வங்கிகளுக்குள் பணம் வரத்து குறைந்தால், லாபம் குறையும், இதனால் மீண்டும் ஒரு வங்கியில் ரெசிஷன் ஏற்படலாம்.

இந்த அபாயத்தை உணர்ந்த முதலீட்டாளர்கள், நிலைமை மோசமடைவதற்கு முன்பு பங்குகளை விற்பனை செய்கிறார்கள். இப்படி தான் சீனா முதல் இந்தியா வரையில் அனைத்து நாடுகளின் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

டிரம்ப்-ன் திட்டமிட்ட வீழ்ச்சியா?: டிரம்ப் அரசாங்கமே வேண்டுமென்றே பங்குச் சந்தை வீழ்ச்சி அடைய வைக்கிறதா என்பதற்கான பதிலை தான் தற்போது பார்க்கப்போகிறோம். தொடர்ச்சியான பங்குச் சந்தை உயர்வு பொருளாதார வலிமையைக் குறிக்கிறது. ஆனால், டிரம்ப் அரசின் வியூகம் வேறு விதமாக இருக்கிறது.

பைடன் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவின் டாப் 10% பணக்காரர்களுக்குச் சாதகமாக இருப்பதாக அமெரிக்க டிரஷரி செயலாளர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறுகிறார். இதேவேளையில் கீழ்த்தட்டில் இருக்கும் 50% மக்கள் பெரிய அளவில் பயனடையவில்லை. அமெரிக்காவை பொறுத்த வரையில் காகிதத்தில் நன்றாக இருந்தாலும், உண்மையில் பாதி அமெரிக்க மக்கள் மோசமான நிலையில் தான் உள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.

அமெரிக்க மக்கள் மத்தியில் இருக்கும் இந்த ஏற்ற தாழ்வைத் தான் டிரம்ப் நிர்வாகம் மாற்ற விரும்புகிறது. இதற்கான முதல் படி அமெரிக்கப் பொருளாதாரத்தை நுகர்வோர் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து வணிகங்கள் மற்றும் முதலீடுகள் சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதாவது பொருட்களை மட்டுமே வாங்கிக்குவிக்கும் நாடாக இல்லாமல் முதலீட்டை ஈர்க்கும், வர்த்தகங்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் நாடாக மாற வேண்டும் என டிரம்ப் அரசு விரும்புகிறது.

இந்த மாற்றம் செய்ய குறைந்தது 20 வருடம் ஆகும், ஆனால் டிரம்ப் நிர்வாகத்திற்கு அந்த அளவுக்கு பொறுமையில்லை, குறிப்பாக டிரம்ப்-க்கு அனைத்தும் வேகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இப்படியிருக்கையில் தான் தனது மொத்த நிர்வாக அதிகாரிகளையும் அதிரடியாகவும், முந்தைய ஆட்சி முறை மற்றும் கொள்கைகளுக்கு மாற்று கருத்துக்கொண்டவர்களை தேடி தேடி நியமித்தார்.

அமெரிக்க மக்களிடம் இருக்கும் இந்த ஏற்றத்தாழ்வை குறைக்க முதலில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அப்படி பார்த்தால் அமெரிக்காவின் அதிகப்படியான கடன், ஆபத்தான பொருளாதார குமிழிகள் (economic bubbles) மற்றும் அதிகப்படியான பணவீக்கம்.

அமெரிக்க அரசின் கடன் தற்போது 34 டிரில்லியன் டாலராக உள்ளது, இந்திய பொருளாதார மதிப்பை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிக கடன். இதில் 7 டிரில்லியன் டாலர் கடனை விரைவில் refinancing செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் என்று பார்த்தால் 4.8% வரை உயர்ந்துள்ளன. சரி விஷயத்திற்கு வருவோம், இதற்கும் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் என்ன தொடர்பு..? இருக்கு மிகப்பெரிய லிங்க் உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதால், முதல் பாயிண்டில் கூறியது போல் வங்கிகளுக்கு போதுமான நிதி இல்லாமல் போனால் முதலீட்டாளர்கள் ஆபத்தான பங்குகளிலிருந்து பணத்தை எடுத்து பாதுகாப்பான அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இதனால் அமெரிக்க அரசு பத்திரங்களுக்கான தேவை அதிகரித்து, அவற்றின் விலை உயரும், வட்டி விகிதங்கள் குறையும். இதுவே டிரம்ப் அரசின் திட்டம்.

கடந்த ஒரு மாதத்தில் 10 ஆண்டு அரசு பத்திரங்களின் மீதான லாபம் ஜனவரியில் 4.8% இலிருந்து இன்று 4.25% ஆக குறைந்துள்ளது. இது சிறிய மாற்றமாக இருந்தாலும், பல டிரில்லியன் கணக்கான கடனுக்கு ரீபைனான்சிங் செய்யும் போது பல பில்லியன் டாலர்கள் சேமிக்க முடியும்.

இதனால் ரெசிஷன் உருவாகும் என்ற அச்சம் இருந்தாலும் அது கட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே இருக்கும் என்பது டிரம்ப் அரசின் கணக்கு. இதன் ஆரம்ப புள்ளி தான் இறக்குமதி வரி விதிப்பு (Tariffs).

பொதுவாக வரி விதிப்பு அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிக்கும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் டிரம்ப் அரசோ அரசின் செலவுகளை குறைக்கும் மிகப்பெரிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அரசின் செலவுகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

அரசின் மானியம் குறைக்கும் போது மக்கள் பொருட்கள் வாங்குவதை குறைத்து நுகர்வு அளவை குறைப்பார்கள் இதனால் பணவீக்கமும் கட்டுக்குள்ள இருக்கும் என்பது டிரம்ப் அரசின் தியரி. மறுமுனையில் கார்ப்ரேட் வரியை குறைத்து, பல நிர்வாக கட்டமைப்புகளை எளிமையாக்கி முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவது அடுத்தகட்ட நடவடிக்கை. இது அனைத்தும் அமெரிக்க பொருளாதாரத்தை தற்போது இருக்கும் நீர்க்குமுழி நிலையில் இருந்து வலிமையான நிலையை அடையும் என்பது 78 வயதான டொனால்டு டிரம்ப்-ன் கனவு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+