பிரதமர் நரேந்திர மோடியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு.. அமெரிக்கா ஆய்வறிக்கை சொல்வதென்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் புதுபிக்கதக்க ஆற்றல் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸ் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை மெய்யாக்கும் விதமாக, நாட்டில் புதுபிக்கதக்க ஆற்றலை அதிகரிக்க, அரசு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து வருகின்றது.

அந்த வகையில் அரசின் இலக்கான 500 ஜிகா வாட்ஸினை 2030க்குள் இந்தியா அடைந்து விட்டால், இந்தியா பல்வேறு பலன்களை அடையும் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று சுட்டி காட்டியுள்ளது.

செலவு குறையும்

செலவு குறையும்


குறிப்பாக மின்சார செலவினங்களை குறைக்க முடியும், மீண்டும் வரும் இருமடங்கு மின்சார தேவை, மாசுபடுத்தும் நிலக்கரி மற்றும் எரிவாயு அடைப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மூடாமலே, மாசுவினை குறைக்க முடியும் என கூறியுள்ளது.
உண்மையில் இதன் மூலம் இந்தியா பல்வேறு பலன்களை அடையும். ஆனால் பல சவால்களையும் அதற்கு முன்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

அரசின் இந்த இலக்குக்கு மத்தியில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அது பேட்டரிகளின் செலவினங்கள், விண்ட் மற்றும் சோலார் எனர்ஜி டெக்னாலஜி தொடர்பான செலவினங்கள், கடந்த தசாப்தத்தில் இருந்ததை போல இருக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள அனல் மின் நிலையங்களையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பல விஷயங்கள் உள்ளன.

மின்சார செலவு – கார்பன் உமிழ்வு குறையும்

மின்சார செலவு – கார்பன் உமிழ்வு குறையும்

லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் (LNBL) ஆய்வின் படி, 2030க்குள் இந்தியா அதன் 500 ஜிகா வாட் இலக்கினை அடைந்தால், நிச்சயம் மேற்கண்ட செலவினங்கள் குறையும். குறிப்பாக மின்சார செலவினங்கள் 8 - 10% குறையும், அதேபோல 2020வுடன் ஒப்பிடும்போது 2030ல் கார்பன் உமிழ்வானது 43 - 50% குறையும் என கணித்துள்ளது.

கடும் சவால்கள்

கடும் சவால்கள்

2015 பாரீஸ் ஒப்பந்தம் காலைநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 188 நாடுகள் இணைந்து உருவாக்கியது. தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையைவிட குறைவாக புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆக அந்த நடவடிக்கைக்கு மத்தியில் இந்தியா அதன் இலக்கினை அடைய கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் அளவினை பொருட்படுத்தாமல், கார்பன் உமிழ்வை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவின் நிலை அப்படியில்லை.

இலக்கினை அடைவோம்

இலக்கினை அடைவோம்

எப்படியிருப்பினும் சமீபத்தில் ஐ.நா மாநாட்டில் பிரதமர் மோடி, 2030ல் இந்திய அதன் இலக்கினை அடையும் என உறுதிபடுத்தினார். இது அதற்கான உறுதியான செயல்பாட்டினை காட்டுகின்றது. எனினும் தற்போது 100 ஜிகா வாட்டில் இருந்து, 2030ல்க்குல் 500 ஜிகாவாட் ஆக அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இது 2022ம் ஆண்டில் 175 ஜிகா வாட் திறனை நிறுவுவதில் அரசு உறுதியாக உள்ளது என கூறியது நினைவுகூறத்தக்கது.. இவ்வாறு 2030க்குள் அரசு இலக்கினை எட்டினால் 2020ல் 25% ஆக உள்ள கார்பன் உமிழ்வு இல்லாத ஆற்றம், 2030ல் 50% ஆக அதிகரிக்க கூடும் என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

நிபுணர்கள் எச்சரிக்கை

நிபுணர்கள் எச்சரிக்கை

எனினும் அதற்கு முன்பாக சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கான கட்டணங்கள், ஒழுங்கற்ற நிதி ஓட்டம், நிலம் பற்றாக்குறை மற்றும் மின்சார விநியோக நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமையை, இந்தியா கவனிக்காவிட்டால் இந்த இலக்குகள் எட்டப்படாமல் போகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US study conforms PM narendra modi’s green energy goal

US study conforms PM narendra modi’s green energy goal/ பிரதமர் நரேந்திர மோடியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு.. அமெரிக்கா ஆய்வறிக்கை சொல்வதென்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X