டிரம்ப்-க்கு குட்டு வைத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்.. பிறப்பால் குடியுரிமை சட்டம் ரத்து.. இந்தியர்கள் ஹேப்பி..!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் குடியுரிமை வழங்கும் அந்நாட்டு சட்டத்தை ரத்து செய்யும் டிரம்ப்பின் முயற்சி உச்ச நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான தீர்ப்பு மூலம் கோடிக்கணக்கான அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்ப்-ன் முயற்சிக்கு இரண்டாவது பெரும் தோல்வியாகும்.

ஏற்கனவே கீழ் நீதிமன்றம் டிரம்ப்-ன் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் டிரம்ப் அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தடை விதித்திருந்தது. இதை தொடர்ந்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, இன்றைய இறுதிக்கட்ட விசாரணையில் 6-3 என்ற வாக்கெடுப்பில் கீழ் நீதிமன்ற உத்தரவை சரியானது என்று இத்தீர்ப்பை வழங்கப்பட்டு உள்ளது.

டிரம்ப்-க்கு குட்டு வைத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்.. பிறப்பால் குடியுரிமை சட்டம் ரத்து.. இந்தியர்கள் ஹேப்பி..!

டிரம்ப்-க்கு 2வது முறையாக உச்ச நீதிமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளார். பிப்ரவரி மாதம் உலக நாடுகளுக்கு மொத்தமாக சுங்க வரிகளை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. தற்போது பிறப்பால் பெறப்படும் குடியுரிமையை ரத்து செய்யும் முயற்சியிலும் டிரம்ப் மோசமான வகையில் தோல்வி அடைந்துள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு முக்கியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தோற்றுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஜனவரியில் பதவியேற்ற சில நாட்களில் டிரம்ப் வெளியிட்ட முக்கிய உத்தரவுகளில் இதுவும் ஒன்று. டிரம்ப் வெளியிட்ட உத்தரவின் படி குழந்தையின் இரு பெற்றோரும் அமெரிக்க குடிமகன் அல்லது சட்டபூர்வமான நிரந்தர குடியுரிமை (Green Card) இல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை அரசு ஏற்கக் கூடாது என்று டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். டிரம்ப்-ன் இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் பல மாநில அரசுகளும் மற்றும் குடியுரிமை அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன.

அமெரிக்க சட்டத்தின் 14வது திருத்தத்தின் படி, அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்குகிறது. டிரம்ப்பின் உத்தரவு இந்த அரசியலமைப்பு விதியை மீறுவதாகும், காலம் காலமாக நடைமுறையில் இருந்த சட்டத்தை மீறி செயல்படும் உத்தரவாகும் இருக்கிறது என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு, ஆண்டுதோறும் அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு பிறக்கும் சுமார் 2.5 லட்சம் குழந்தைகளின் குடியுரிமை நிலை பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். இதோடு ஜூலை 4 தேதியன்று அமெரிக்கா தனது 250வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் நிலையில், குடியுரிமை என்றால் என்ன என்பதை வரையறை செய்யும் இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

டிரம்ப் இந்த வழக்கில் தோல்வியடைந்தாலும், டிரம்ப் ஏற்கனவே விதித்திருந்த குடியுரிமை கட்டுப்பாடுகள் மற்ற பல வடிவங்களில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இதில் முக்கியமாக ஹெச்1பி விசாவில் கட்டுப்பாடு, சம்பள கட்டுப்பாடுகள் போன்றவை இன்னும் அமலில் இருக்கின்றன.

டிரம்ப்-ன் இந்த கடுமையான குடியுரிமை கொள்கைகள், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஐடி - டெக் துறையில் மட்டும் அல்லாமல் விவசாயம், கட்டுமானம், தொழிற்துறை உள்ளிட்ட பல துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். டிரம்ப்-ன் இந்த விதி நடைமுறைக்கு வந்திருந்தால் ஐடி துறை முதல் ப்ளூ காலர் வேலைவாய்ப்பு துறை வரையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+