வரி என்ற ஒற்றை வார்த்தை மூலம் உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் மிகப்பெரிய பாடத்தை கற்பித்திருக்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அதிக அளவில் வரி விதிக்கின்றன. ஆனால் நாமோ அந்த நாட்டு பொருட்களை குறைந்த வரியில் தான் வாங்கி பயன்படுத்துகிறோம். எனவே போட்டி வரி விதிக்க போகிறேன் என தான் அதிபராக பதவி ஏற்ற உடனேயே அறிவிப்பு வெளியிட்டார் டிரம்ப்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 50 சதவீத வரி விதிப்பின் பாதிப்பை வெகுவாக உணர்ந்தன.

இந்நிலையில் தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கும் விதித்த போட்டி வரி செல்லாது என தீர்ப்பு தந்திருக்கிறது. உலக நாடுகள் அனைத்துமே கொண்டாட கூடிய இந்த தீர்ப்புக்கு காரணமாக இருப்பவர் ஒரு இந்திய வம்சாவளி என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வரி என்ற வார்த்தையை பயன்படுத்தி உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டி தனக்கு சாதகமாக பணிய வைத்தார் டிரம்ப்.
பல்வேறு நாடுகளும் வேக வேகமாக சென்று இதற்காக அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தமும் செய்து கொண்டன. இதற்கிடையில் தான் டிரம்பின் வரி விதிப்பு அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது எனக்கூறி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரிவிதிப்பு நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டிருக்கிறது.
வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூடியிருக்கிறது. உலகமே கொண்டாட கூடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு காரணமாக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் கத்தியால் என்ற வழக்கறிஞர் தான். சிறந்த முறையில் வாதங்களை முன் வைத்து ட்ரம்பின் வரி மிரட்டலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி வரி விதிக்க கூடிய அதிகாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தான் இருக்கிறது, நுகர்வோருக்கும் பல்வேறு வணிகர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வரி சட்ட விரோதமானவை என மிக வலுவான வாதங்களை நீல் கத்தியால் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தார். அவருடைய வலுவான வாதங்கள் தான் இந்த போட்டி வரி ரத்தாவதற்கும் ட்ரம்புக்கு எதிரான தீர்ப்பு கிடைப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நீல் கத்தியால் அதிபர்கள் அதிகாரம் படைத்தவர்கள் தான் ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு அவர்களை விட வலிமையானது சக்தி வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார். நீல் கத்தியாலின் பெற்றோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 1960 களிலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். இவருடைய தந்தை சுரேந்தர் ஒரு பொறியாளர் தாயார் பிரதீபா ஒரு மருத்துவர். 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அமெரிக்கா நீதித்துறையின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications