அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரையிலான வரியை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், மசோதாவை சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமெரிக்க செனேட்டர் லிண்ட்சே கிரஹாம் தனது டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்தார்.
இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்..? ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரெசிப்ரோக்கல் வரி உடன் அபராத வரி விதிக்கப்பட்டு உள்ள வேளையில் இந்த திடீர் வரி எதற்காக என்ற கேள்வி வருகிறது. இதற்கான பதில் வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பு.

டிரம்ப் அரசு, 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் பிப்ரவரி 2025 முதல் ரெசிப்ரோக்கல் மற்றும் அபராத வரிகளை விதித்தது. இந்தச் சட்டம் தேசிய அவசர காலங்களுக்கு மட்டுமே என்றாலும், டிரம்ப் அரசு வர்த்தக வரிகளுக்கு பயன்படுத்தியது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு டிரம்ப் அரசுக்கு எதிராக வரலாம் என கணிப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விவாதம் நவம்பர் மாதம் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் சட்ட அடிப்படை குறித்து சந்தேகம் தெரிவித்தனர். இந்த நிலையில் நீதிமன்றம் ரெசிப்ரோக்கல் வரிகள் சட்டவிரோதம் என்று தீர்மானித்தால், டிரம்ப் அரசு இதுவரை ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலித்த தொகையை திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடும். இல்லையெனில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்கள் அல்லது அரசு இந்த விஷயத்தை கையாள அனுமதிக்குமா என்பதில் தெளிவில்லை.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஜனவரி 9, 2026 வெள்ளிக்கிழமை இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் சமூக வலைதளத்தில் செய்த பதிவில் அமெரிக்கா இந்த ரெசிப்ரோக்கல் வரி மூலம் 600 பில்லியன் டாலர் வரையிலான தொகையை வசூலித்தது அல்லது விரைவில் வசூலிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க நிதி அமைச்சக தரவுப்படி, 2025 நிதியாண்டில் (செப்டம்பர் 30 வரை) மொத்த சுங்க வரி வசூல் அதிகப்பட்சமாக 195 பில்லியன் டாலர் மட்டுமே உள்ளது.
மேலும் அமெரிக்க சுங்க வரி அமைப்பின் டிசம்பர் 14 வரையிலான தரவுகள் படி, IEEPA கீழ் விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி 133.5 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது.
இந்த தரவுகளில் நாடுகள் மற்றும் வரி வசூல் வகைகள் குறித்த தரவுகளையும் பட்டியிலிட்டு உள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங் (ஃபென்டானில் தொடர்பு) 37.87 பில்லியன் டாலர், மெக்சிகோ 6.48 பில்லியன் டாலர், கனடா 2.42 பில்லியன் டாலர், அனைத்து நாடுகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி 81.74 பில்லியன் டாலர்.
அபாராத வரியாக பிரேசில் 0.97 பில்லியன் டாலர், இந்தியா 1.99 பில்லியன் டாலர், ஜப்பான் (வர்த்தக ஒப்பந்தம் பிறகு) 2.03 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஃபென்டானில் தொடர்பான வரிகள் சீனாவுக்கு பிப்ரவரி 4 முதலும், கனடா-மெக்சிகோவுக்கு மார்ச் 4 முதலும் விதிக்கப்பட்டன. ரெசிப்ரோக்கல் வரிகள் ஏப்ரல் 5 முதல் தொடங்கின. பிரேசில், இந்தியா, ஜப்பான் மீது கூடுதல் தண்டனை வரிகள் விதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பு உலக வர்த்தகத்தை பாதிக்கலாம்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications