உலகளாவிய பொருளாதார போட்டியில் அமெரிக்கா - சீனாவுக்கு மத்தியில் பெரும் யுத்தமே நடந்து வவரும் வேளையில், சீனாவின் சில்க் பாதையை பின்பற்றி அமெரிக்கா தெற்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தையும், கட்டுப்பாட்டையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
டிரம்ப் ஏற்கனவே வரி விதிப்பின் மூலம் பல நெருக்கடிகளை கொடுத்து தெற்காசிய நாடுகளை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வரும் வேளையில், சீனா, இந்தியா ஆதிக்கம் செலுத்தும் பங்களாதேஷ் நாட்டில் முக்கிய நகர்வை முன்வைத்துள்ளது. இந்த நகர்வு 3 முக்கிய பொருளாதார நாடுகளுக்கு பங்களாதேஷ் சிம்ம சொப்பனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, கிழக்குப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை சமன்படுத்தும் முயற்சியில், குவாட் போர்ட்ஸ் ஃபார் ஃப்யூச்சர் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கா, பங்களாதேஷ் துறைமுகத்தில் முதலீடு செய்யவும், சில முக்கிய வசதிகளை கைப்பற்றி செயல்படுத்கவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான முதல் கூட்டம் இந்த வாரம் டாக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் குவாட் துறைமுகத் திட்டம்
அமெரிக்கா, குவாட் போர்ட்ஸ் ஃபார் ஃப்யூச்சர் திட்டத்தின் கீழ் தனது வர்த்தகத்தையும் சப்ளை செயினையும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, இந்த வாரம் டாக்காவில் நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில், இரு தரப்பினருக்கு மத்தியில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தின் முடிவில் அமெரிக்கா பங்களாதேஷ் துறைமுகத்தில் முதல்கட்ட ஆய்வை நடத்திய பின்பு அதன் பின்பு தனது முடிவுகளை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க இராணுவ செயல்பாடுகள் சிட்டகாங் பகுதியில் ஏற்கனவே அதிகரித்துள்ளன, இதன் மூலம் அமெரிக்கா தனது குவாட் போர்ட்ஸ் ஃபார் ஃப்யூச்சர் திட்டத்தை வேகமாக செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவின் இப்புதிய திட்டம், சீனாவின் விரிவாக்கத்திற்கு எதிராகவும், சீனாவுக்கு இணையாகவும் வளரவும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் பங்களாதேஷ் இந்தியாவுக்கு அருகில் உள்ளது, இந்தியாவும் பங்களாதேஷ் துறைமுகத்தில் முதலீடு செய்ய தயாராகி வருகிறது.
இந்தியாவின் துறைமுக ஒப்பந்தங்கள்
இந்தியா, பங்களாதேஷ் துறைமுகங்களில் ஏற்கனவே வலுவான இருப்பை கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசினா அரசின் கீழ், இந்தியா மாங்லா துறைமுகத்தில் ஒரு டெர்மினலின் செயல்பாட்டு உரிமைகளைப் பெற்றது. 2018ஆம் ஆண்டு, சிட்டகாங் மற்றும் மாங்லா துறைமுகங்களில் டிரான்சிட் மற்றும் கார்கோ ஷிப்பிங்கிற்கு இந்தியாவுக்கு முழுமையாக பயன்படுத்த பங்களாதேஷ் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, எதிர்காலத்தில் பொது-தனியார் கூட்டு மாதிரியில் பங்களாதேஷில் துறைமுகம் கட்டும் திட்டத்தையும் தற்போது பரிசீலித்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் முதலீடுகள் வந்துள்ளது.
பங்களாதேஷ் மீதான வரி
டிரம்ப் ஆட்சியில் பங்களாதேஷ் மீது முதலில் 37 சதவீதம் ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்பட்டது. பின்பு பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு வரியை 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்புக்கு முக்கியமான காரணம் அமெரிக்கா உடன் நடந்த வர்த்தக ஒப்பந்தம் தான். இதற்கு பின்பு தான் அமெரிக்கா பங்களாதேஷ் துறைமுகத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை ஆய்வு செய்த துவங்கியுள்ளது.
More From GoodReturns

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications