திருப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இடியாக அமைந்தது டிரம்பின் இந்த அறிவிப்பு.
திருப்பூர் டாலர் சிட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை அமெரிக்க அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை இரண்டு மாவட்டங்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்ய இருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூரை டாலர் சிட்டி என அழைக்கிறோம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திருப்பூர் ஜவுளித்துறை. இந்தியாவிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நகரமாக திருப்பூர் நகரம் திகழ்ந்து வருகிறது.

அமெரிக்காவிற்கு 30% ஏற்றுமதி: திருப்பூரில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஆயத்த ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா ,ஜப்பான், தென்கொரியா என பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகின் முன்னணி பிராண்டுகளுக்கான ஆடைகள் பலவும் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு தான் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஆயத்த ஆடைகளில் 30 சதவீதம் வரையிலான ஆடைகள் அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
25% வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை திருப்பூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதியை வெகுவாக குறைக்கும் என உற்பத்தி நிறுவனங்களும் ஏற்றுமதியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவரான கே எம் சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில் திருப்பூரில் உற்பத்தி செய்யக்கூடிய 30 சதவீத ஜவுளி அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் என கூறுகிறார்.
பண்டிகை கால வர்த்தகம் பாதிப்பு: பல்வேறு நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு பிரச்சினை கிடையாது ஆனால் அமெரிக்காவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களுக்கு இது பிரச்சினையாக இருக்கிறது ,உடனடியாக அவர்களால் மற்ற நாடுகளில் இருந்து ஆர்டர் பெற முடியாது என்பதால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது என கூறுகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருப்பதால் பொதுவாக இந்த காலத்தில் தான் திருப்பூரில் இருந்து அதிக துணி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் டிரம்பின் வரி விதிப்பு அதற்கே பிரச்சினை ஏற்படுத்தி இருக்கிறது.

நிலைமை மோசமடையுமா?: கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி திருப்பூரிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து ஜவுளி ஏற்றுமதி என்பது தொடங்கப்பட்டு விடும். 25% வரி விதிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து ஆடைகளை வாங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே சீனா, வங்கதேச நாடுகள் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிடும் நிலையில் 25% வரி நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
ரூ.2,000 கோடி மதிப்புள்ள வர்த்தகம்: கரூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவரான கோபாலகிருஷ்ணன் ஆண்டுதோறும் கரூரில் இருந்து 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் துணிமணிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதில் 750 கோடி மதிப்புள்ள பொருட்கள் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்திலேயே ஏற்றுமதி செய்யப்படும் என கூறுகிறார். இந்த ஆண்டு டிரம்பின் நடவடிக்கை 2000 கோடி ரூபாய் வர்த்தகத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்கிறார்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு: ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் இந்தியாவிலிருந்து 4.59 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஜவுளி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தரமான துணி என்பதால் பல அமெரிக்க நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களிடம் ஆர்டர்களை அதிகரித்தன, ஆனால் இந்த வரி விதிப்புக்கு பின்னர் ஆர்டர்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நேரடியாகவே லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications