டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு மீது 25% ரெசிப்ரோக்கல் வரி மற்றும் தண்டனை வரியை விதிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து இன்று பங்குச்சந்தையில் பெரும் தடுமாற்றம் ஏற்றபட்டு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டு இழப்பை எதிர்கொண்டு உள்ளனர் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.
டிரம்ப்-ன் வரி விதிப்பு மூலம் பல துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் கணிக்கப்பட்ட வேளையில், பலரும் கவனிக்கப்படாத ஒரு துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் Apex Frozen Foods, Avanti Feeds, Coastal Corporation மற்றும் Waterbase போன்ற நிறுவன பங்குகள் மூன்று முதல் ஆறு சதவீதம் வரையில் கடுமையாக சரிந்துள்ளது. இந்த 4 நிறுவனங்களுமே இந்தியாவின் முன்னணி இறால் ஏற்றுமதி நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனங்கள் ஏற்கனவே அதிகப்படியான வர்த்தகத்தை அமெரிக்காவுடன் வைத்திருக்கும் காரணத்தால், டிரம்ப்-ன் 25 சதவீத வரி இத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. டிரம்பின் வரி இந்தியாவின் இறால் துறையை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவை மிகப்பெரிய சந்தையாக வைத்துள்ளது உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இறால் ஏற்றுமதி நிகழ்கிறது. இது இந்தியாவின் மொத்த 5.6 பில்லியன் டாலர் இறால் ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிப்பதை காட்டுகிறது. இந்திய இறால் வர்த்தகத்தில் அமெரிக்க 40% பங்கைக் கொண்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், Coastal Corporation-இன் பங்குகள் ரூ.35.50-இல் முடிந்து 3.40% சரிந்துள்ளது. Avanti Feeds-இன் பங்குகள் வர்த்தக துவக்கத்தில் பெரும் சரிவை சந்தித்து ஒரு பங்கு 645 ரூபாய் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 680 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 3.4% சரிவை 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் Apex Frozen Foods-இன் பங்குகளும் வர்த்தக துவக்கத்தில் பெரும் சரிவை சந்தித்து ஒரு பங்கு 226 ரூபாய் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 240 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 0.74 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளன.
இந்த சரிவு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கையால் ஏற்பட்ட தாக்கத்தை காட்டுகிறது. Avanti Feeds-இன் கடந்த நிதியாண்டு மார்ச் காலாண்டு அறிக்கையின்படி, அதன் மொத்த வருமானத்தில் சுமார் 77% அமெரிக்காவிலிருந்து வந்தது, இது கடந்த ஆண்டு அதே காலத்தில் 80% ஆக இருந்ததில் சிறிய குறைப்பு கண்டுள்ளது. அதேபோல், Apex Frozen Foods-இன் மார்ச் காலாண்டு முதலீட்டாளர் அறிக்கையில், அமெரிக்கா அதன் மொத்த வருமானத்தில் 53% பங்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உலகளாவிய இறால் சந்தையில் சுமார் ஒரு பங்கு (20%) பங்கு வகிக்கிறது. இந்தியாவின் இறால் ஏற்றுமதியில் ஏறத்தாழ 48% அமெரிக்காவிற்கு செல்கிறது, இதனால் இந்த வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் படி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் இறால் ஏற்றுமதியில் 17.7% வரி உள்ளது, இதில் 5.7% countervailing duty மற்றும் 1.8% anti-dumping duty அடங்கும். இது இப்போது 25% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 1 லட்சம் இறால் பண்ணைகள் உள்ளன, இதில் பெரும்பாலானவை ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் புதிய 25% வரி, ஆந்திர பிரதேச ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சவாலாக அமையும்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications