அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம் இந்தியா மீதான மொத்த வரி சுமை 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்பின் இந்த முடிவால், தமிழகத்தின் முக்கிய துணி ஏற்றுமதி மையங்களான திருப்பூர் மற்றும் கரூர் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் உலகத்தரமான ரெடிமேட் ஆடைகள் (garments) தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏறத்தாழ ரூ.4,000 கோடி மதிப்பிலான ஆடைகள் மற்றும் 'made-ups' எனப்படும் மெத்தை உறைகள், படுக்கைத் துணிகள், கம்பளம் போன்ற துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதேபோல கரூரும் மேசைத் துணிகள், கிச்சன் லினன்கள், ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிட்டல் உபயோக துணிகள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வகை தயாரிப்புகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதால், இந்திய தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் விலை அதிகரிக்கும். இதனால், அவற்றின் போட்டித் திறன் குறையும். குறிப்பாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளுடனான போட்டியில் இந்தியா பின்தங்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
இந்த வகை தயாரிப்புகளில் பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் பெரும்பாலானோர் நேரடி தொழிலாளர்கள். வரி உயர்வு காரணமாக, ஏற்றுமதி குறையும் பட்சத்தில், உற்பத்தி குறையும். இதனால் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படலாம். இதே நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பின்னடைவு ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் K.M. சுப்பிரமணியன் கூறுகையில், "திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் சுமார் 30% அமெரிக்கா செல்கிறது. இந்த வரி உயர்வு அமெரிக்க சந்தை மீது அதிகம் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, வரி உயர்வு, எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய தயாரிப்புகளை வாங்கி வரும் அமெரிக்க வாங்குநர்களும், உடனடியாக வேறு நாடுகளுக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கும் இது சிரமமாக இருக்கும். எனவே, இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, இந்த வரிச் சுமை குறைக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வரி உயர்வு பணி வாய்ப்புகள், உற்பத்தி அளவு மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியவற்றில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தொழில்துறை வட்டாரங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications