பேஸ்புக், கூகிள்-க்கு மட்டும் தள்ளுபடி விலையில் ஜியோ பங்குகள் விற்பனை.. என்ன காரணம்..?

இந்தியாவின் டிஜிட்டல் உலகை கட்டமைக்கும் திட்டத்துடன் மிகப்பெரிய முதலீட்டை ஈர்த்துள்ள ரிலையன்ஸ் ஜியோ இதை எப்படிச் சாத்தியமாக்கப் போகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஆனால் இதற்கு உடனே பதில் கிடைக்காது.

முகேஷ் அம்பானியின் இந்தி மாபெரும் திட்டத்தை நம்பி பல பன்னாட்டு முதலீடு நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பங்கு விற்பனையில் முகேஷ் அம்பானி முதலில் வந்த பேஸ்புக் நிறுவனத்திற்கும், கடைசியாக வந்த கூகிள் நிறுவனத்திற்கு மட்டும் தள்ளுபடி விலையில் பங்குகளை விற்பனை செய்துள்ளார். ஏன் இவ்விரு நிறுவனங்களுக்கு மட்டும் தனிப்பட்ட சலுகை..? எதற்காக இந்தத் தள்ளுபடி..? வாங்கப் பார்ப்போம்.

முதலீடுகள்

முதலீடுகள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கூகிள், பேஸ்புக், சவுதி PIF, கேகேஆர், விஸ்டா, சில்வர் லேக், முபாதாலா, ஜெனரல் எலக்ட்ரிக், ADIA, டிபிஜி, எல் கேட்டர்லான், இன்டெல், குவால்கம் என 13 நிறுவனங்கள் இணைந்து சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்தது.

இதில் பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனத்தைத் தவிரப் பிற அனைத்து நிறுவனங்களும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை 4.91 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கணக்கிட்டு முதலீடு செய்துள்ளனர்.

 

கூகிள் மற்றும் பேஸ்புக்

கூகிள் மற்றும் பேஸ்புக்

பேஸ்புக் 4.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 9.99 சதவீத பங்குகளில் 43,574 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இதுவே கூகிள் 4.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 7.73 சதவீத பங்குகளில் 33,737 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

மற்ற நிறுவனங்களை விடவும் இவ்விரு நிறுவனங்கள் மத்தியிலுமே மதிப்பீட்டுத் தொகை வித்தியாசம் உள்ளது. இதற்கு என்ன காரணம்..??!!

 

நிதியியல் முதலீட்டாளர்கள் மற்றும் டெக் முதலீட்டாளர்கள்

நிதியியல் முதலீட்டாளர்கள் மற்றும் டெக் முதலீட்டாளர்கள்

இந்த முதலீட்டைப் பார்க்கும் போது நமக்குத் தெளிவாகத் தெரிவது நிதியியல் முதலீட்டாளர்களுக்கும், டெக் முதலீட்டாளர்களுக்கும் வித்தியாசம் தான். இன்டெல் மற்றும் குவால்காம் தனது முதலீட்டு நிறுவனத்தில் வாயிலாகத் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது, ஆனால் பின்னாளில் ஜியோவிற்கு டெக் உதவிகளைச் செய்யவும் வாய்ப்பு உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் டெக் நிறுவனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களைத் தவிரப் பிற அனைத்து நிறுவனங்களுக்கும் 4.91 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்துள்ளனர்.

 

டெக் உதவிகள்

டெக் உதவிகள்

கூகிள் மற்றும் பேஸ்புக், ஜியோவின் டிஜிட்டல் இந்தியா கனவை நினைவாக்கவே முதலீடு செய்துள்ளதால், ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான டெக் உதவிகளை இவ்விரு நிறுவனங்களும் செய்யத் தயாராக உள்ளது. இதன் காரணமாகத் தான் இவ்விரு நிறுவனங்களுக்கும் முதலீட்டின் போது சலுகை கொடுக்குள்ளது

கூகிள்

கூகிள்

மேலும் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாகக் கருதப்படும் கூகிள் இந்தியாவில் டிஜிட்டல் சேவை தளத்தை மேம்படுத்தவும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்கவும் கூகிள் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது.

இதன் மூலம் ஜியோ மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய், சொந்த முதலீட்டைப் பயன்படுத்த ஒரு மிகப்பெரிய வாடிக்கையாளர் எனக் கூகிள் நிறுவனத்திற்கு இது டபுள் ஜாக்பாட்-ஆக அமைந்துள்ளது.

 

பிற முக்கியச் சேவைகள்

பிற முக்கியச் சேவைகள்

இதுமட்டும் அல்லாமல் கூகிளின் ஜியோ முதலீட்டின் மூலம் புதிய 4ஜி ஸ்மார்ட்போன், 5ஜி தொழில்நுட்ப மேம்பாடு, ஈகாரமஸ் தளத்தின் விரிவாக்கம், பல்வேறு மொழிகளில் கூகிள் அனைத்து சேவைகளும் மக்களுக்குக் கொடுப்பது எனப் பல திட்டங்களை இக்கூட்டணி அறிவித்து வரும் நிலையில் இது இரு தரப்புக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+