இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தடுமாறி வருவது அனைவருக்கும் தெரியும், இதற்கு முக்கியக் காரணமாக ஐடி நிறுவனங்களுக்குச் சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாகப் புதிய திட்டங்கள் கிடைக்காத காரணத்தால் இந்த நிலை என்பதே உண்மை.
ஆனால் உண்மையில் இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்காவில் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது என்பது தான் ஐடி ஊழியர்களைப் பயமுறுத்தும் உண்மை.

அமெரிக்க அரசின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது, 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஐடி துறையில் வெறும் 700 புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சொல்லப்போனால் இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்த டேட்டா பலரையும் தூக்கி வாரிப்போட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிய ஐடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருடத்திற்கு 2,67,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கியதாக அமெரிக்கத் தொழிலாளர் அமைச்சக தகவல் கூறுகிறது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் பெரும்பாலான காலகட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வருடத்தின் இறுதியில் வெறும் 700 புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மோசமான நிலையில் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பணிநீக்கம் செய்யப்பட்டது, பணிநீக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிதாக ஊழியர்களை நியமிக்கப்படாததும், ஒட்டுமொத்த ஐடி துறையும் புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுவதும் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
குறிப்பாக ஏஐ பயன்பாட்டுக்கு வந்த பின்பு அதிகப்படியான பணிகள் ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளது, இதனால் பலரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதற்குக் கூகுள் நிறுவனத்தில் நேற்று நடந்த பணிநீக்கம் முக்கிய ஆதாரமாகும். கூகுள் நிறுவனம் 2023ல் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் பணிநீக்க செய்ய இறங்கியுள்ளது. இனியும் பணிநீக்கம் தொடரும் எனவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது 88000 காலி பணியிடங்கள் இருக்கும் வேளையில், ஊழியர்களின் திறன் போதுமானதாக இல்லை என்பதால் 101,000 ஐடி ஊழியர்கள் தற்போது வேலைவாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். இதற்கிடையில் புதிதாகப் பட்டம் பெற்று வரும் பட்டதாரிகள் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கூகுள் மூலம் தெரு முக்கில் இருக்கும் ஐடி நிறுவனம் வரையில் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியிருக்கும் காரணத்தால் துவக்க நிலை ஊழியர்கள் மற்றும் துவக்க நிலை பணிகளை நீக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பெரிய அளவிலான டிமாண்ட்.
30 பேர் துவக்க நிலை ஊழியர்கள் செய்யும் வேலையை ஏஐ மூலம் செய்ய வைக்கும் கட்டமைப்பை வெறும் 5 ஏஐ இன்ஜினியர்கள் உருவாக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் பெரும் சரிவு உருவாகியுள்ளது. இதேவேளையில் ஏஐ இன்ஜினியர்களுக்கு டபுள் சம்பளம் கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக உள்ளது.
இதனால் தற்போது இருக்கும் ஓரே வழி, ஐடி ஊழியர்கள் வேலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஏஐ தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற வேண்டும், இல்லைன்னா நீண்ட காலம் பணியில் இருக்க முடியாது. இது ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நிறுவனத்திலும் மாறினாலும் பெரும் பகுதி ஐடி வர்த்தகத்தின் நிலை இதுதாங்க.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications