அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் கிரீன் கார்டு முறைகளில் புது புது கெடுபிடிகள் நடைமுறைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா அனுப்புவது கடினமானதாக மாறியுள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே என்பதைமுன் வைத்து டிரம்ப் நிர்வாகம் விசா கெடுபிடிகளை கடைபிடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோனி டி'எஸ்போசிட்டோ இது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்குள் திறமையான உள்ளூர் பணியாளர்கள் கிடைக்காத பட்சத்தில் தான் ஹெச்1பி விசாவை நிருவனங்கள் பயன்படுத்த வேண்டும், ஆனால் அதற்கு மாறாக அனைத்து ஊழியர்களையும் இந்த விசாவைல் அழைத்து வந்து வேலை செய்ய வைக்கிறார்கள் இது முற்றிலும் தவறு என குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டு அமெரிக்க ஊழியர்களை நிறுவனங்கள் மாற்றுவதை தடுக்கும் நோக்கத்தில்தான் இந்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். அமெரிக்க அரசு ஐடி நிறுவனங்களின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைக்ளை தீவிரமாக கண்காணித்து வருகிறது என கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் ,டிசிஎஸ் , விப்ரோ ,ஹெச்சிஎல் மற்றும் காக்னிசண்ட் போன்ற நிறுவனங்கள் மீது கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட புதிய விசா கட்டுப்பாடுகள் மற்றும் லாட்டரி முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்திய ஐடி நிறுவனங்களின் புதிய விசா பதிவுகள் கடுமையாக சரிந்துள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஹெச்1பி பதிவுகள் முந்தைய நிதி ஆண்டில் 8,886 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிதி ஆண்டில் வெறும் 759 ஆக குறைந்துள்ளது. அதேபோல், டிசிஎஸ் நிறுவனத்தின் பதிவுகள் 5,955-ல் இருந்து 284 ஆக குறைந்துவிட்டன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டமான PERM (Permanent Labor Certification - Green Card) திட்டத்திலிருந்து மேற்படி இந்திய ஐடி நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் புதிய விண்ணப்பங்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் முடக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்திற்கு அங்கே செயல்படும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என கூறுகிறது. பல நிறுவனங்கள் ஹெச்1பி விசாவை தவறாக பயன்படுத்தி குறைந்த ஊதியத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை அழைத்து வருகிறது என குற்றம்சாட்டுகிறது. இதனால் தான் விசா முறைகளை கடுமையாக்கிவிட்டது.
அமெரிக்க எம்ப்பிக்களீல் சிலர் ஹெச்-1பி விசா முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டு வருகின்றன. ஆனால் கட்டண உயர்வு மற்றும் கடுமையான விதிகள் மூலம் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு நெருக்கடி தருகிறது.
இந்த அதிரடி மாற்றங்களால், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சவால்கள் அதிகமாகியுள்ளன. இதனால் அமெரிக்காவிலேயே உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது அல்லது இந்தியாவில் இருந்து கொண்டு பணிகளை கையாள்வது போன்ற மாற்று வழிகளை நோக்கி நகர்ந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications

