பெட்டி, படுக்கையோடு அமெரிக்காவை காலி செய்யும் இந்தியர்கள்.. 3 வருடத்தில் டபுள் மடங்கு உயர்வு!

எங்குத் திரும்பினாலும் பணிநீக்கம், விசா ரினிவல் செய்ய முடியாத நிலை, இந்திய ஐடி ஊழியர்களைத் திரும்ப அழைக்கும் நிறுவனங்கள், அமெரிக்கக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் அமெரிக்காவில் நிலவும் மோசமான வேலைவாய்ப்பு சந்தை காரணமாக புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நபர்கள், இந்தியாவில் இருக்கும் வயதான பெற்றோர்களை இறுதி காலகட்டத்தில் உடன் இருந்து பார்த்துக்கொள்ள, பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் திருமணம், கிரீன் கார்டு பெறுவதில் தோல்வி இப்படிப் பல காரணங்களால் அமெரிக்காவில் இருந்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெட்டி, படுக்கையோடு அமெரிக்காவை காலி செய்யும் இந்தியர்கள்.. 3 வருடத்தில் டபுள் மடங்கு உயர்வு!

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பும் டெக் துறை ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஸ்டாபிங் நிறுவனமான எக்ஸ்ஃபீனோ (Xpheno) வெளியிட்டுள்ள தரவுகளின் 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வெறும் 9 மாதங்களில் மட்டும் சுமார் 12700 டெக் ஊழியர்கள் அமெரிக்காவிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் குடியுரிமையை விடுத்து அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த காலம் போய் தற்போது அமெரிக்காவில் இருந்து பொட்டி படுக்கை எல்லாம் கட்டிக்கொண்டு இந்தியா திரும்பி வருகின்றனர்.

Also Read

மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக்கில் அமெரிக்காவில் 8 - 10 கோடி ரூபாய்க்குப் பிரம்மாண்டமான வீட்டை வாங்கி தங்கி வாழ்ந்து வந்த இந்தியக் குடும்பங்கள் பலர் விட்டையும், வீட்டில் இருக்கும் பெரும்பாலான உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தாய் நாட்டிற்குச் சென்றுள்ளதாக வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

2025ஆம் ஆண்டில் 15100 பேர் இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இதுதான் அதிகப்படியான எண்ணிக்கையாக இருந்தது. ஆனால் 2026ம் ஆண்டில் வெறும் 9 மாதத்தில் 12700-ஐ தொட்டுவிட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 15000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக எக்ஸ்ஃபீனோ தெரிவித்துள்ளது.

Recommended For You

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்க அடிப்படை காரணமாக இருப்பது இரண்டு மட்டுமே, 1. அமெரிக்காவில் இருக்கும் வேலைவாய்ப்பு சூழ்நிலை, ஏஐ வந்த பின்பு ஊழியர்களின் தேவை என்பது பெரிய அளவில் குறைந்து வருகிறது. 2. விசா, கிரீன் கார்டு பெறுவதிலும், ரினிவல் செய்வதிலும் பெரும் சரிவு ஏற்பட்டு இருப்பது. இவ்விரண்டின் காரணமாகப் பட்டதாரிகள் முதல் மூத்த நிலை ஊழியர்கள் வரையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், 3-4 வருட இடைவெளியில் இரட்டிப்பாகும் அளவுக்கு உயரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

உதாரணமாக 2023ஆம் ஆண்டில் 7200 பேர் மட்டுமே வந்த நிலையில் தற்போது 12,700 பேராக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டிலும் இந்த எண்ணிக்கை 9800 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+