ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் தாக்குதல் நவம்பர் மாதம் நடைபெறும் மிட்டேர்ம் தேர்தல் வரையில் இருக்காது என டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறிய நிலையில், ஈரான் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஈரான் மீதான பொருளாதார, வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் அடுத்தகட்ட நெருக்கடியாக நிதிச் சந்தையைக் குறிவைத்துள்ளது அமெரிக்கா. ஈரான் தனது நாணயத்தை வைத்து உலக நாடுகளில் வர்த்தகம் செய்ய முடியாது என்பதால் கிரிப்டோகரன்சியை வைத்து தற்போது மறைமுகமாக நிதி பரிமாற்றம் செய்து வருகிறது.

இதை கண்டுபிடித்த அமெரிக்க அரசு ஈரானுக்கும், ஈரான் நாட்டுடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான 1 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்கா அரசு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச நிதி பரிமாற்ற சந்தையில் ஈரானுக்கு இருக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் முடக்கும் நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே ஈரான் நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருக்கும் வேளையிலும், மக்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் வேளையில் அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தும் பணியில் ஈரான் இறங்கியுள்ளது. இதற்காக டாலர் புழக்கத்தை ஈரான் நாட்டின் அதிகரித்துள்ளது அந்நாட்டின் மத்திய வங்கி.
மேலும் சர்வதேசச் சந்தையில் எளிதாக வர்த்தகம் செய்ய இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ரியால் நாணயத்தின் மதிப்பைக் கட்டுப்படுத்த செயற்கையான மாற்று விகிதத்தைக் கொண்டு கன்ட்ரோல் செய்து வந்ததை நிறுத்தியுள்ளது.
மேலும் ரியால் - டாலர் மத்தியிலான நாணய மாற்றத்தை ஓப்பன் மார்கெட் வர்த்தகத்தில் செய்ய முடிவு செய்துள்ளது. இவை அனைத்து கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ளது. தற்போது ஈரான் சீனாவுடனும், துருக்கி உடன் வர்த்தகத்தை அதிகரித்து வருகிறது, அமெரிக்கக் கடற்படைகள் ஹார்முஸ் வழித்தடத்தை முடக்கியிருக்கும் காரணத்தால் ஈரான் சாலை மற்றும் சாலை வழியாக மேம்படுத்தும் பணிகளை விரிவாக்கம் செய்து வருகிறது.
இவ்விரு நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய வேண்டுமாயினும் டாலர் அவசியம். அண்டை நாடுகள் அல்லாத வர்த்தகத்தில் தான் ஈரான் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
