அமெரிக்க அதிபர் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மே 29ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்காகப் போராடிய போராட்டக்காரர்களைக் கொள்ளைக்காரர்கள் (Thugs) என்றும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் தயாராக உள்ளது என்றும், திருட்டு ஆரம்பித்தால், சுட ஆரம்பிக்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவை வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என டிவிட்டர் மக்களின் பார்வையில் இருந்து மறைந்த நிலையில், பேஸ்புக் டிரம்ப்-க்குச் சாதகமாகச் செயல்பட்டு இந்தப் பதிவுக்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அமெரிக்கச் சமுக வலைத்தளத்தில் தற்போது மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
#StopHateforProfit
பேஸ்புக்-இன் மெத்தனத்தை எதிர்த்து சமுக வலைத்தளத்தில் மக்கள் #StopHateforProfit என்ற போராட்டத்தை ஜூன் 19ஆம் தேதி கையில் எடுத்தனர். இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
மக்களின் இந்த #StopHateforProfit போராட்டத்தில் நியாயம் இருப்பதைப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் உணர்ந்து பேஸ்புக் உடனான விளம்பரம் வர்த்தகத்தைப் பல முன்னணி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.
ஹோண்டா அமெரிக்கா
இனவாதத்திற்கு எதிராகவும், மக்களின் #StopHateforProfit போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அமெரிக்கா ஜூலை மாதத்தில் இருந்து பேஸ்புக் தளத்தில் விளம்பர செய்யப்போவது இல்லை என அறிவித்துள்ளது.
பேஸ்புக் உடன் சென்ற ஆண்டு இந்நிறுவனம் 6 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளது.
கோகோ கோலா
அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா இனவாதத்திற்கு எதிராகவும், மக்களின் #StopHateforProfit போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக அடுத்த 30 நாட்களுக்குப் பேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்யப்போவது இல்லை என முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் உடன் சென்ற ஆண்டு இந்நிறுவனம் 22.1 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளது.
Levi Strauss & Co
அமெரிக்காவின் முன்னணி ஜீன்ஸ் மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Levi Strauss & Co-வும் மக்களின் இந்தச் சமூக வலைத்தளப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் ஜூலை மாதம் வரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரம் செய்யப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் உடன் சென்ற ஆண்டு இந்நிறுவனம் 2.8 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளது.
வெரிசோன்
அமெரிக்காவின் முன்னணி மொபைல் மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான வெரிசோன் பேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் இனவாதம் எதிர்க்க யூடியூப் தளத்தில் சில முக்கியமான விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டுள்ளது வெரிசோன்.
பேஸ்புக் உடன் சென்ற ஆண்டு இந்நிறுவனம் 22.9 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இங்கு டாப் 5 நிறுவனங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தி நாத்ர் பேஸ், Hershey Co போன்ற பல முன்னணி நிறுவனங்களும், சில முக்கியச் சமுக வலைத்தள விளம்பர சேவை அளிக்கும் நிறுவனம் பேஸ்புக்-கிற்கு எதிராக முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications