அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையில்லை. ஒரே நாளில் சுமார் 30க்கும் அதிகமான நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்து சர்வதேச வர்த்தகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை மீது எவ்விதமான புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.
டிரம்ப் வெளியிட்ட பட்டியலிலும் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு வரி விதிக்கப்படவில்லை, இதேபோல் வெள்ளை மாளிகை அதிகாரிகளும் புதன்கிழமை அன்று இந்த இரண்டு நாடுகளும் புதிதாக அமல்படுத்தப்பட்ட வரியில் உட்படுத்த மாட்டார்கள் என்றும் இத்தகவலை உறுதி செய்துள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டு நாடுகளும் டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்கனவே சில முக்கிய பிரிவுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டின் எனர்ஜி பொருட்களுக்குக் குறைந்த விகிதத்துடன், இரு நாடுகளில் இருந்து வரும் மற்ற அனைத்து பொருட்களுக்கும் பொதுவான இறக்குமதி வரியான 25 சதவீத விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் தற்போது இகுக்கும் வரி விலக்கு தொடரும் என்பதால் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோ தப்பித்துள்ளது. இதன் மூலம் உலகில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்வதில் கனடாவுக்கும், மெக்சிகோ-வுக்கும் அதிகப்படியான லாபம் உள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை ஏற்கனவே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் டிரம்ப் விதித்த சில வரிகளை திரும்ப பெற்றாலும் நேற்று அறிவிக்கப்பட்ட அனைத்து இறக்குமதிக்குமான 10 சதவீதம் அடிப்படை வரி கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு பொருந்தும். இதேபோல் டிரம்ப் அரசு இந்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை துறைவாரியாக விதிக்காமல் நாடு வாரியாக விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கியூபா, பெலாரஸ், வட கொரியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் புதிய "பரஸ்பர வரிகளில்" இருந்து விலக்கப்பட்டுள்ளன என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. இந்த விலக்கு இந்த நாடுகள் ஏற்கனவே அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த புதிய வரிகள் இந்த நாடுகளுக்கு விதிக்கப்படாது என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications