டிரம்ப் - ஜெலென்ஸ்கி இடையேயான வாக்குவாதத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்கா-உக்ரைன் இடையே கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-உக்ரைன் கனிம ஒப்பந்தம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகை சென்றிருந்தார். அப்போது, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்தை தெரிவித்தபோது டிரம்ப் குறுக்கிட்டு அவரை கண்டித்தார். மேலும் வான்சும் கண்டிக்கும் வகையில் பேசினார். இதனை தொடர்ந்து ரஷியாவுடனான போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலென்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலென்ஸ்கி வெளியேறினார். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், அமெரிக்கா-உக்ரைன் இடையே கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் மீண்டும் கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நேற்று (செவ்வாய் கிழமை) மாலை அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கிடையேயான கனிம வள ஒப்பந்தத்தை அறிவிக்க விரும்புவதாக தனது ஆலோசகர்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்பதால், சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், அமெரிக்கா-உக்ரைன் கனிம ஒப்பந்தம் தொடர்பாக "கையெழுத்து எதுவும் திட்டமிடப்படவில்லை" என்று அமெரிக்க பொருளாதாரத் துறை செயலாளர் (U.S. Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) கூறியதாக Fox நியூஸ் நிரூபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வெள்ளை மாளிகை, கியேவில் உள்ள உக்ரைனின் அதிபர் நிர்வாகம், வாஷிங்டனில் உள்ள உக்ரைன் தூதரகம் ஆகியவையும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள், கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அதிகாரிகளுடன் கனிம ஒப்பந்த கையெழுத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெள்ளி கிழமை (Friday) வெள்ளை மாளிகையில் நடந்த சர்ச்சைக்குப் பிறகும் இந்த பேச்சுவார்த்தை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது, உக்ரைன் அதிபர், டிரம்பிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் இது ஒப்பந்தம் உறுதி செய்யப்பட வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒப்பந்தம் மாறிவிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரம் கையெழுத்திடப்படவிருந்த ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் எதுவும் இல்லை, ஆனால் உக்ரைனின் இயற்கை வளங்களிலிருந்து வருவாயைப் பெற அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அரசுக்கு சொந்தமான எந்தவொரு இயற்கை வளங்களின் எதிர்கால பணமாக்குதலில் (monetization) 50% உக்ரைன் அரசாங்கம் அமெரிக்க-உக்ரைன் நிர்வகிக்கும் மறுசீரமைப்பு முதலீட்டு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தால் என்ன பயன்? இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் உக்ரைனின் முக்கிய கனிம வளங்களை அணுக முடியும். இதில் டைட்டேனியம், லித்தியம், கிராஃபைட், நிக்கல் மற்றும் அரிய கனிமங்கள் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் தனது வருவாயின் 50% ஐ ஒரு கூட்டு நிதியத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த நிதி $500 பில்லியன் வரை சேரும் வரை அமெரிக்காவும் நீண்டகால பொருளாதார உதவியை வழங்கும். இந்த ஒப்பந்தம் உக்ரைன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அமெரிக்காவிற்கு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு துறையில் தேவையான கனிமங்களை வழங்கவும் உதவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications