டிரம்ப் திட்டமிட்ட படியே ரெசிப்ரோக்கல் வரி மற்றும் அபராத வரியை விநாயகர் சதுர்த்தி தினம் முதல் நடைமுறைப்படுத்திய நிலையில், இனி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். இந்த 5 சதவீத வரி விதிப்பில் சில பொருட்களும், சேவை துறை விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிரம்ப் அடுத்த முக்கிய மாற்றத்தை செய்ய களத்தில் இறங்கியுள்ளார், ஆம் அடுத்த அதிரடி மாற்றம் என்றால் அது ஹெச்1பி விசா தான். கடந்த சில மாதங்களாக ஹெச்1பி விசா-வின் லாட்டரி முறையை மாற்றுவது குறித்த திட்டங்களை டிரம்ப் நிர்வாகம் விவாதித்து வருகிறது. இதன் நீட்சியாக அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹாவர்ட் லுட்னிக் அதிரடியாக பேசி பல கோடி இந்தியர்கள் கனவை கண்ணாடிப்போல் நொறுக்கியுள்ளது.

ஹாவர்ட் லுட்னிக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, தற்போதைய H-1B விசா திட்டத்தை அமெரிக்கத் தொழிலாளர்களை வேலைவாய்ப்பு சந்தையில் இருந்து நீக்கும் ஒரு "SCAM" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் திட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தயாராகி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
டிரம்ப் தலைமையிலான அரசு H-1B விசாக்களில் செய்யப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, இதற்கு முக்கிய காரணம் இதுநாள் வரையில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையிலான ஹெச்1பி விசா பெறுவது இந்தியர்கள் தான். தற்போது கொண்டு வரப்படும் மாற்றங்கள் இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையலாம். இதோடு டிரம்ப் அரசு ஹெச்1பி விசாவை தொடர்ந்து கிரீன் கார்டு முறைமையையும் மறுசீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
H-1B விசா திட்டத்தில் மாற்றங்கள்
அமெரிக்காவின் H-1B விசா திட்டம், தற்போது ஒரு குலுக்கல் முறையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த முறையை ஹாவர்ட் லுட்னிக் கடுமையாக விமர்சித்துள்ளார், இது அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்க வேலைகளுக்கு முதலில் அமெரிக்கத் தொழிலாளர்களை அமர்த்துவதே பெரிய அமெரிக்க நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் ஃபாக்ஸ் நியூஸ் உடனான உரையாடலில் தெரிவித்தார்.
இதற்காக, தற்போதைய ஹெச்1பி விசா முறையை மாற்றி, ஊதிய அடிப்படையிலான தேர்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கு, தான் நேரடியாக ஈடுபட்டு வருவதாக லுட்னிக் உறுதிப்படுத்தினார். இந்த மாற்றம் மூலம் அதிக ஊதியம், அதீத திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என விளக்கம் கொடுத்தார்.
கிரீன் கார்டு முறைமையின் குறைபாடுகள்
தற்போதைய கிரீன் கார்டு முறையின் மூலம் தவறான நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஹாவர்ட் லுட்னிக் கூறினார். சராசரி அமெரிக்கர் ஆண்டுக்கு 75,000 டாலர்கள் சம்பாதிக்கிறார், ஆனால் சராசரி கிரீன் கார்டு பெறுபவர் 66,000 டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார். இது மிகவும் தவறான விஷயமாக உள்ளது, தற்போதைய முறையில் திறன் அளவில் கீழ்மட்டத்தை தேர்ந்தெடுப்பது போல உள்ளது என்று ஹாவர்ட் லுட்னிக் கூறினார்.
இந்த முறைமையை மாற்றி, உயர்ந்த திறன்களும், அதிக சம்பளம் பெறுபவர்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்பின் தலைமையில் குடியேற்றக் கொள்கை மறுவடிவமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கோல்டு கார்டு திட்டம்
சமீபத்தில் டிரம்ப் அரசு அறிமுகம் செய்த கோல்டு கார்டு என்ற குடியுரிமை திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் குறைந்தபட்சம் 5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாக லுட்னிக் கூறினார், இதோடு இத்திட்டத்தின் முலம் முதலீடு செய்ய சுமார் 2,50,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும், இது மூலம் அமெரிக்க அரசுக்கு இலவசமாக 1.25 டிரில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டம், செல்வந்தர்களையும் உயர்ந்த திறன்களைக் கொண்டவர்களையும் அமெரிக்காவிற்கு ஈர்க்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications