அமெரிக்க சிலிக்கான் வேலியின் புகழ்பெற்ற வென்சர் கேப்பிடல் முதலீட்டாளரான டிம் டிரேப்பர், பெங்களூருவின் மோசமான போக்குவரத்தைப் பார்த்து வியந்தது மட்டும் அல்லாமல் பெருமையாகவும் பேசியுள்ளார். விசித்திரமா இருக்கே, பெங்களூரில் இருக்கும் மக்கள் தினமும் டிராபிக் பற்றி புலம்பி வரும் வேளையில் டிம் டிரேப்பர் புகழ்ந்து பேசுவது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
டிம் டிரேப்பர் தனது ஸ்டார்ட்அப் பிட்சிங் நிகழ்ச்சியான 'மீட் தி டிரேப்பர்ஸ்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறார், இந்தியாவில் மும்பை, பெங்களூரு, டெல்லி, ஒடிசா, கோவா மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

டிம் டிரேப்பர் - டிஐஇ மும்பையுடன் இணைந்து, இந்தியாவில் சிறந்த ஐடியா உடன் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஆரம்ப கட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கண்டறிந்து முதலீடு செய்யவே அவரது இந்திய பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையில் இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரின் போக்குவரத்தை 'மிகவும் அழகானது' என்று பாராட்டியுள்ளார்.
பெங்களூர் டிராபிக் குறித்து டிம் டிராப்பர் அளித்த பேட்டியில் "இந்த நாட்டை நான் மிகவும், ரசிக்கிறேன், இங்குள்ள மக்கள் மிகவும் அற்புதமானவர்கள். யாரென்றே தெரியாத ஒருவர் பெங்களூருக்கு வாங்க, என என்னை வரவேற்றார் இதெல்லாம் என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் பெங்களூரின் டிராபிக்கிற்கு மத்தியில் மக்கள் மிகவும் எளிதாகப் பயணிக்கின்றனர், இதைப் பார்க்க மிகவும் வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
டிம் டிரேப்பர் சீனாவின் பைடு, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், காயின்பேஸ், ஸ்கைப், ரோபின்ஹூட் மற்றும் ஹாட்மெயில் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள முக்கியமான வெனசர் கேப்பிடல் முதலீட்டாளர்கள்.
பெங்களூரு இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மையமாக பாராட்டப்பட்டாலும், அதன் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆயினும் தினமும் பல்லாயிரம் மக்கள் பெங்களூர் நகருக்கு வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications