அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். இதனால் அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்தது. இருப்பினும் அண்மையில் சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இன்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாள் பயணமாக இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உஷா, அவர்களின் 3 குழந்தைகள் மற்றும் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர். அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஜேடி வான்ஸின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகை குடும்பம் மற்றும் அரசியல் கலந்த பயணமாகும்.

இன்று மாலை 6.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உள்ளிட்ட கேபினட் அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் தலைவர்கள் பங்கேற்கும் இரவு உணவு விருந்தில் கலந்து கொள்கிறார். ஜூலை மாத இறுதிக்குள் இருதரப்பு (இந்தியா-அமெரிக்கா) வர்ததக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் விரைந்து வருகின்றன.
நிர்ணயித்த காலத்துக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டால்,டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலில் இருந்து தப்பித்து விடலாம் என்று இந்தியா கணக்கு போடுகிறது. அதற்கு ஏதுவாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் வருகையும் அமைந்துள்ளது. ஜேடி வான்ஸின் இந்திய பயணத்தின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.
ஜேடி வான்ஸின் இந்திய வருகை குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இது ஒரு அதிகாரப்பூர்வ வருகை, அவர் பிரதமரை சந்திப்பார் அமெரிக்காவுடன் எங்களுக்கு ஒரு விரிவான மூலோபாய உலகளாவிய கூட்டாண்மை உள்ளது. எனவே எந்தவொரு நாட்டுடனும் நீங்கள் அந்த அளவிலான கூட்டாண்மையை கொண்டிருக்கும்போது தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் நீங்கள் விவாதிப்பீர்கள். இந்த விஜயம் எங்கள் இருதரப்பு உறவுகளுக்கும் மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியும், அந்நாட்டின் இரண்டாவது பெண்மணியுமான உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். உஷா சிலுகுரி ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். 1970களின் பிற்பகுதிகளில் உஷா சிலுகுரிவான்ஸின் பெற்றோர் கிரிஷ் சிலுகுரி மற்றும் லட்சுமி சிலுகுரி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கலிபேர்னியாவின் சான்டியாகோவில் குடியேறினர்.
பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா சிலுகுரி, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஜேடி வான்ஸை உஷா முதன்முதலில் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ஜேடி வான்ஸின் இந்திய பயணத்தில் தாஜ் மஹால் மற்றும் ஜெய்ப்பூரும் இடம் பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications