அமெரிக்காவில் வேலை தேடிக்கொள்ள புதிய வழி.. டெக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

அமெரிக்க வாழ்க்கை பல கோடி இளைஞர்களுக்கு பெரும் கனவாக இருக்கும் வேளையில் இந்த கனவை நினைவாக்க ஒரு எளிய வழியை உருவாக்கியுள்ளது அமெரிக்க அரசு.

இப்புதிய அரசு அறிவிப்பு மூலம் திறமையான இளைஞர்கள் நாளைக்கே அமெரிக்காவுக்கு பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வேலையை தேடிக்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் பல முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் பலர் இன்னும் வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் உள்ளனர், இதனால் பலர் அமெரிக்க அரசின் விதிமுறைகள் படி வேலைவாய்ப்பு பெற முடியாவிட்டால் 60 நாட்களுக்கு பின்பு அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இது அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்நாட்டு நிறுவனங்கள், அரசுக்கும் பெரும் பிரச்சனையாக இருந்தது. இந்த நிலையில் தான் முக்கியமான ஒரு அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு அசத்தியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

நீங்கள் சுற்றுலா பயணியாகவோ, அல்லது பிஸ்னஸ் விசா-வில் அமெரிக்கா சென்றிருந்தால் இனி புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்வது மட்டும் அல்லாமல் இண்டர்வியூவ்-க்கும் விண்ணப்பிக்க முடியும்.

பி-1 மற்றும் பி-2 விசா

பி-1 மற்றும் பி-2 விசா

ஆம், பி-1 மற்றும் பி-2 விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள் இனி புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும், இண்டர்வியூவ் அட்டன்ட் செய்ய முடியும் என அமெரிக்க குடியுரிமை அமைப்பான USCIS டிவிட்டரில் B-1 or B-2 விசா பெற்றுள்ளவர்கள் இனி அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் "Searching for employment" மற்றும் "interviewing for a position"-க்கு தகுதி அடைவார்கள் என தெரிவித்துள்ளது.

  வொர்க் பர்மிட்

வொர்க் பர்மிட்

இந்த நிலையில் சுற்றுலா விசாவின் கீழ் அமெரிக்கா வந்து வேலை பெற்றுவிட்டால் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வொர்க் பர்மிட் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது USCIS அமைப்பு.

 நாட்டை விட்டு வெளியேற்றம்

நாட்டை விட்டு வெளியேற்றம்

இது மட்டும் அல்லாமல் வொர்க் பர்மிட் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது விண்ணப்பதாரர் B-1 அல்லது B-2 விசா காலம் முடிந்த உடன் கட்டாயம் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் USCIS அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இது யாருக்கெல்லாம் உகந்த ஐடியா..?

யாருக்கு லாபம்

யாருக்கு லாபம்

இந்தியாவில் நீங்கள் மிகவும் முக்கியமான தொழில்நுட்பம், மருத்துவம், ஆராய்ச்சியில் பணியாற்றி அனுபவம் கொண்டு இருக்கும் பட்சத்தில் அமெரிக்க நிறுவனத்தில் இந்தியாவில் இருந்து சேர முடியாது என்ற இக்கட்டான நிலையில் இருப்போருக்கு பெரிய அளவில் பயன்படும்.

வொர்க் பர்மிட் விண்ணப்பம்

வொர்க் பர்மிட் விண்ணப்பம்

இதேபோல் வொர்க் பர்மிட் விண்ணப்பம் கட்டாயம் ஒப்புதல் பெற்ற வேண்டும் என்ற பட்சத்தில் நீங்கள் B-1 அல்லது B-2 விசாவில் இருந்து வந்து அமெரிக்க நிறுவனத்தில் வேலை பெற்ற பின்பு அந்த நிறுவனம் அமெரிக்காவில் இருப்பவர்களால் செய்ய முடியாது என உத்தரவாதத்தை கடிதம் வாயிலாக பரிந்துரை செய்யும் பட்சத்தில் கட்டாயம் வொர்க் பர்மிட் பெற முடியும்.

விசா காத்திருப்பு காலம்

விசா காத்திருப்பு காலம்

இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் விசா காத்திருப்பு காலம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கிட்டத்தட்ட 600 நாடுகளுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பிற இடங்களை காட்டிலும் சென்னையில் காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கும் காரணத்தால், இதை சரி செய்ய அமெரிக்க அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+