ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

போர் என்றாலே பெரும் பொருட் செலவுகள் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும், இதனால் போர் நடக்கும் காலம் அதிகரிக்கும் போது செலவுகளும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ, வெற்றிக்கான வாய்ப்பும் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதோடு கூட்டணி பலம், நீண்ட காலம் செலவுகளை தாக்கு பிடிக்கும் நிதி ஆதாரம் ஆகிய அனைத்தும் போரின் வெற்றி யார் பக்கம் இருக்கிறது என்பதை காட்டும்.

இப்படி ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போரை பார்க்கும் போது அமெரிக்காவின் பலம் அதிகமாக இருந்தாலும், அமெரிக்காவின் நிதி நிலையை காலி செய்யும் வேலையை ஈரான் கணகச்சிதமாக செய்வதாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் அமெரிக்காவுக்கு ஈரான் உடனான போர் பெரும் பாதிப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

ஈரான்-அமெரிக்கா மோதலில் ஈரானின் மலிவு விலை ஷஹெத்-136 ட்ரோன்களுக்கு (Shahed-136 drones) எதிராக அமெரிக்கா பயன்படுத்தும் 4 மில்லியன் டாலர் பேட்ரியட் ஏவுகணை அமைப்பு (Patriot air-defense system) பெரும் நிதி சுமையாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு ஈரான் நாட்டின் ட்ரோன்களை 90%க்கும் மேல் வெற்றிகரமாக தடுத்தாலும், 20,000 டாலர் மதிப்புள்ள ஒரு ட்ரோனை அழிக்க 4 மில்லியன் டாலர் ஏவுகணை செலவழிப்பது அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது. இது அமெரிக்க கஜானா-வுக்கு நீண்டகால கவலையாக மாறியுள்ளது.

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

மலிவு விலை ஆயுதங்கள் உத்தி
ஈரான் மலிவு விலை ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்காவின் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளை செலவுகள் மூலம் தொய்வடைய செய்யும் உத்தியை கையாண்டு வருகிறது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஈரான் கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான மோதலுக்குப் பிறகு 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மீதமிருப்பதாகக் கூறியிருந்தாலும், ஷஹெத் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகம் மற்றும் எளிதில் உற்பத்தி செய்யக்கூடியவை.

அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணை அமைப்பு பொதுவாக உயர் வேக பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்களை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஈரான் நாட்டின் மலிவு ட்ரோன்களை எதிர்கொண்டு வருகிபது. இதனால் விலை வேறுபாடு அமெரிக்காவுக்கு பெரும் சுமையாகிறது.

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

அமெரிக்காவின் நிதி அழுத்தம்
Stimson Center-ன் கெல்லி க்ரீகோ கூறுகையில், ஈரான் தற்காப்பு அணுகுமுறையை கையாள்கிறது. ஈரானின் சிறிய ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா - இஸ்ரேல் ஏவுகணைகளை விரைவில் தீர்த்துவிடுவார்கள் என்றும், இது போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா-இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் ப்ளூம்பெர்க் பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணை ஒன்று 4 மில்லியன் டாலர் மதிப்புடையது. லாக்ஹீட் மார்ட்டின் 2025-இல் 600 PAC-3 இன்டர்செப்டர் ஏவுகணைகளை உற்பத்தி செய்தது. ஆனால் மத்திய கிழக்கில் தொடங்கிய மோதலில் ஆயிரக்கணக்கானவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு தேவையான ஏவுகணைகளை உடனடியாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்க முடியாது.

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

THAAD அமைப்பு
மேலும் சவுதி அரேபியா, UAE ஆகிய நாடுகள் அமெரிக்காவின் Patriot air-defense system விட திறன் வாய்ந்த THAAD அமைப்பு பயன்படுத்துகிறது. இது உயர் வேக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வளிமண்டலத்துக்கு வெளியே தடுக்க வடிவமைக்கப்பட்டது. ஒரு THAAD ஏவுகணை 12 மில்லியன் டாலர் மதிப்புடையது.

டிரம்ப் ஈரான் மீதான போர் "நான்கு முதல் ஐந்து வாரங்கள்" நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அனைத்து நாடுகளுக்கும் 20000 டாலர் ட்ரோனை வைத்து ஈரான் தண்ணி கட்டி வருகிறது.

ஈரானில் தற்போது புது தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளதால், ஈரான் நாட்டின் அடுத்தக்கட்ட தாக்குதல் எப்படி இருக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரியும். மேலும் ஈரான் படைகள் தற்போது ஹர்மூஸ் நீர் வழியை மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், ஈரானின் மலிவு ட்ரோன்கள் அமெரிக்காவின் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளை நிதி ரீதியாக வேட்டையாடி வருகிறது. போர் நீடித்தால் இந்த செலவு மேலும் அதிகரிக்கும். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உடனான போருக்கும், பாதுகாப்புக்கும் சுமார் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் நாட்டு உடனால் போடில் முதல் 72 மணிநேரத்தில் பல பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்க செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+