சிலர் தங்கள் கனவில் வருவது நிஜத்தில் நிகழ்வதாக கூறுவதை கேட்டிருப்போம். இது போன்ற சம்பவம் உண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. மேரிலாந்தின், பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் 50,000 டாலர் லாட்டரி பரிசை வென்றுள்ளார். இது இந்திய மதிப்புக்கு ரூ. 42.96 லட்சமாகும். இவருடைய வெற்றியை இன்னும் சுவாரசியமாக்குவதே லாட்டரி நம்பர் தனக்கு கனவில் வந்ததாக அந்தப் பெண் கூறியதுதான். அப்பெண் தான் கனவில் தோன்றிய நம்பரை வைத்து தான் டிக்கெட் வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
கனவில் தோன்றிய நம்பர்: லாட்டரியை வென்ற பெண்மணி, மெரிலாந்து லாட்டரி அதிகாரிகளிடம், டிசம்பர் மாதம் தனக்கு ஒரு தெளிவான கனவு வந்ததாகவும், அதில் குறிப்பிட்ட எண்கள் தொடர்ச்சியாக தோன்றியதாகவும் தெரிவித்தார். இந்த உணர்வை மட்டுமே நம்பி, அவர் ஆக்ஸன் ஹில் ஜிப் மார்ட்டில் இருந்து 9-9-0-0-0 என்ற எண்களுடன் ஒரு பிக் 5 லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

தனக்கு வந்த கனவை பற்றி நினைவுகூர்ந்த அந்தப் பெண், "இந்த வாய்ப்பை நான் தவற விட்டிருப்பேன்.. கனவு வந்து நீண்ட நாட்கள் கழித்து தான் நான் விளையாடினேன்.. இன்னும் சொல்லப்போனால் விளையாடுவதற்கே மறந்து விட்டேன்.. என்றாவது ஒரு நாள் என் கனவில் வந்த எண்களை வைத்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.. அதற்கு ஏதுவாக டிசம்பர் 20 அன்று இந்த பரிசை பெற்றேன்" என்று 50,000 டாலர் பரிசை பெற்ற பெண்மணி கூறியுள்ளார்.
வெற்றி பெற்ற பெண்மணி தன் கனவு குறித்து முதன் முதலில் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் தன் மனைவி கூறியதில் அவருக்கு துளியும் நம்பிக்கையில்லை. லாட்டரி விழுந்த பிறகு தான் அவருடைய கணவரும் நம்பியுள்ளார். புதிதாக கிடைத்த செல்வத்தை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, வெற்றி பெற்ற பெண்மணியின் கணவர், "என் மனைவிக்கு பிடித்த அனைத்து விஷயங்களையும் செய்து கொள்ளட்டும்", என்று கூறியுள்ளார்.
இதேபோல கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சிதம்பரம் ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ. 8.45 கோடி பரிசை பெற்றார் இதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார். வருடா வருடம் முஸ்தபா ஜுவல்லரியில் நடத்தப்படும் ஒரு குலுக்கலில் பங்கேற்று தனது மனைவிக்காக தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். அப்போதுதான் இவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பின்னர் கடை இந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது. அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் எந்த வழியில் வேண்டுமானாலும் நம்மை தேடி வரலாம் என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications