அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரக்கூடிய ஜேபி மார்கன் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் மேகன் பிரவுன். கடந்த 2015 ஆம் ஆண்டு அலுவலகத்தின் கண்ணாடி கதவு உடைந்து தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்துக்காக அவருக்கு தற்போது 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 292 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மேகன் பிரவுன் வழக்கம் போல தன்னுடைய அலுவலகத்தின் கண்ணாடி கதவை திறக்கும் போது ,எதிர்பாராத விதமாக ஏழரை அடி உயரமுள்ள அந்த கண்ணாடி கதவானது திடீரென உடைந்து சிதறி அவரது தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இந்த விபத்து அவரது மூளையில் ஒரு காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. அப்போது பிரவுனுக்கு வயது 27.
மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தன்னுடைய பணியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த அவர் கட்டட உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் துறையில் மிகப்பெரிய ஆய்வாளராக வர இருந்த நிலையில் இந்த ஒரு சம்பவம் அதனை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார். தன்னுடைய அன்றாட வாழ்க்கை சவால் மிகுந்ததாக மாறி விட்டது என்றும் கூறியிருந்தார்.

இந்த காயம் காரணமாக ருசியை அறியும் திறன் மற்றும் வாசனையை உணரும் திறன் ஆகியவற்றை இழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிதிருந்தார். இந்த சம்பவத்திற்கு முன்பாக தான் ஸ்பானிஷ் மொழியை சிறந்த முறையில் பேசி வந்ததாகவும் , காயம் காரணமாக தான் முற்றிலும் அந்த மொழியையே மறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது.
இதில் பிரவுனுக்கு பிடிஎஸ்டி எனப்படும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அவரது மூளை செயல்பாட்டுத் திறன் குறைந்தது மற்றும் அவரது நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றை இழந்து விட்டதாக மருத்துவ அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு பிரவுன் மீண்டும் ஜேபி மார்கன் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அவரால் முன்பை போல திறமையாக பணி செய்ய முடியவில்லை. இதனை அடுத்து அந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
இந்த வழக்கின் அனைத்து கோணங்களையும் விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் இந்த சம்பவம் நிகழ்ந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மேகன் பிரவுனுக்கு 292 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டது.
தற்போது அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடத்தின் உரிமையாளரின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் முறையாக கதவுகளை பராமரிக்காததே காரணம் என்றும் கூறிய நீதிமன்றம், கட்டடத்தின் உரிமையாளர் இந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
Story written by: Devika
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications