என்னாது கச்சா எண்ணெய் விலை மைனஸ் 37 டாலரா?.. நம்பவே முடியலையே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் வந்த பின், பங்குச் சந்தை சரிவு, மக்கள் மரணம், கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை என எல்லாமே நம்மை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

அப்படி ஒரு கொடுமையைத் தான் நேற்று அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையும் சந்தித்து இருக்கிறது.

அப்படி என்ன பெரிய விலை சரிவு?-37 டாலர் என்றால் என்ன பொருள் வாருங்கள் பார்ப்போம்.

சரிவு விவரம்

சரிவு விவரம்

வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்கிற WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, New York Mercantile Exchange (NYMEX) சந்தையில், தாறுமாறாக விலை சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர்ஸின் விலை மைனஸ் 37 டாலரைத் தொட்டு, வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

மைனஸ் 37 டாலர்

மைனஸ் 37 டாலர்

பொதுவாக ஒரு பொருளை 10 ரூபாய், 20 ரூபாய் என, நாம் தான் விலை கொடுத்து வாங்குவோம். அந்த பொருளுக்கு -10 ரூபாய் என்றால் என்ன பொருள்? அதாவது பொருளை வாங்கிச் செல்ல, பொருளை விற்கும் வியாபாரி பணம் தருகிறார் என பொருள்படும். அப்படி ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய்யை எடுத்துச் செல்ல வியாபாரிகள் 37 டாலர் கொடுத்து இருக்கிறார்கள்.

இடைவெளி

இடைவெளி

மே 2020 மாத காண்டிராக்டுக்கும், அடுத்த ஜூன் 2020 மாத காண்டிராக்டுக்கும் மத்தியில் இருக்கும் விலை இடைவெளி, ஒரு பேரலுக்கு சுமார் 20 டாலராக இருக்கிறதாம். இது வரலாறு காணாத பெரிய இடைவெளியாம். சரி, இப்படி திடீரென கச்சா எண்ணெய் விலை தரை தட்டக் காரணம் என்ன? ஏன் -37 டாலர் வரை WTI கச்சா எண்ணெய் விலை சரிந்தது?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கொரோனா வைரஸால் மக்கள் போக்குவரத்து பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் தொடங்கி விமான எரிபொருளான ஏர் டர்பைன் ஃப்யூயல் (Air Turbine Fuel) வரை எல்லா எரிபொருள் வியாபாரமும் தேங்கிவிட்டது. கச்சா எண்ணெய்க்கான டிமாண்டே இல்லை.

இடம் இல்லை

இடம் இல்லை

இப்படி பயன்படுத்தப்படாத கச்சா எண்ணெய், அமெரிக்க எனர்ஜி கம்பெனிகளைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்க எனர்ஜி கம்பெனிகளும் தங்களால் முடிந்த வரை கச்சா எண்ணெய்களை வாங்கிக் குவித்து வைத்து விட்டார்கள். இதற்கு மேல் கச்சா எண்ணெய்யை வாங்கி வைக்க ஸ்டோரேஜ் இடங்கள் இல்லை. எனவே WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸின் விலை தரை தட்டத் தொடங்கிவிட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US WTI crude oil future price touched minus $37

American West Texas Intermediate crude oil future price touched historical low of minus $37. This happened due to coronavirus pandemic which affect the crude oil storage problem and reduced the petroleum products demand all over the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X