ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு இந்தப் பிரச்சனையை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் எல்லையில் இருக்கும் இரு பகுதிகளை நட்பு ஒப்பந்தம் மூலம் கைப்பற்றியுள்ளார்.
இதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள 2 பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தை மொத்தமும் சரிவை சந்தித்துள்ளது.
விளாடிமிர் புடின் கொடுத்த சுதந்திரம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) ஆகியவற்றுக்குச் சுதந்திரம் அளித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
நட்பு மற்றும் உதவி ஒப்பந்தம்
இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புடின், உக்ரைனின் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாத தலைவர்களுடன் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன்
விளாடிமிர் புடின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகள் மீது நிதியியல் தடை விதித்துள்ளது. அமெரிக்கா சொன்னது போலவே செய்துள்ளது. இந்த நிதியியல் தடை மூலம் என்ன நடக்கும்.
நிதியியல் தடை என்றால் என்ன
அமெரிக்க வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகள் மீது விதிக்கப்பட்டு உள்ள நிதியியல் தடை மூலம், அமெரிக்க மக்கள் இவ்விரு பகுதிகளில் அமெரிக்க மக்கள்/நிறுவனத்தால் முதலீடு, வர்த்தகம், நிதியுதவி செய்ய முடியாது என வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன்
மேலும் ரஷ்யா உக்ரைன் நாட்டிற்குள் தொடர்ந்து நுழைந்தால் அமெரிக்காவைத் தொடர்ந்து மற்ற மேற்கத்திய நாடுகளும் அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடை விதிக்கும் என வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா விதித்துள்ள நிதியியல் தடை டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு மட்டுமே. ரஷ்யா மீது அல்ல..
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications