சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் ZTE ஆகிய இரு நிறுவனங்களில் இருந்து டெலிகாம் கருவிகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சீன நிறுவனங்களின் டெலிகாம் கருவிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறப்பட்ட நிலையில் சீன நிறுவனங்களின் டெலிகாம் கருவிகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஹூவாய் மற்றும் ZTE
சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் ZTE இரண்டு நிறுவனங்களும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனால் (FCC) அச்சுறுத்தலாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. மேலும் புதிய விதிகள் கீழ் இவ்விரு நிறுவனங்களின் சாதனங்களின் எதிர்கால அங்கீகாரத்தையும் தடுக்கின்றன.
எதிர்கால அங்கீகாரம்
சீனாவின் கண்காணிப்பு உபகரணத் தயாரிப்பாளரான Dahua Technology Co, வீடியோ கண்காணிப்பு நிறுவனமான Hangzhou Hikvision Digital Technology Co Ltd மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான Hytera Communications Corp Ltd ஆகியவற்றால் செய்யப்பட்ட உபகரணங்களின் விற்பனை அல்லது இறக்குமதியையும் அமெரிக்காவின் FCC தடை செய்துள்ளது.
டெலிகாம் நெட்வொர்க்
அமெரிக்க டெலிகாம் நெட்வொர்க்குகளில் சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலையீட்டைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு லேடெஸ்ட் கட்டுப்பாடாகும்.
அமெரிக்கா - சீனா
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகப் போர் கொரோனாவுக்கு முன்பு மோசமான நிலையில் இருந்தது. இதற்கிடையே தற்போது அமெரிக்கா மீண்டும் சீனாவையும் சீன நிறுவனங்களையும் கட்டம் கட்டி அடிக்கத் துவங்கியுள்ளது.
சீன டெலிகாம் நிறுவனங்கள்
சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது சீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் ZTE ஆகிய இரு நிறுவனங்களில் இருந்து டெலிகாம் கருவிகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதிய விதிகள் கீழ் இவ்விரு நிறுவனங்களின் சாதனங்களின் எதிர்கால அங்கீகாரத்தையும் தடுக்கின்றது.
மத்திய வரித் துறை
சமீபத்தில் மத்திய வரித் துறை இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் கணிசமான வித்தியாசத்தைக் கண்டறிந்துள்ளது. அதாவது சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள் குறைவான விலையைப் பதிவிட்டு உள்ளதை மத்திய வரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்றுமதி, இறக்குமதி
தற்போது இந்திய அரசு சீனாவில் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா 79.16 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. மறுபுறம், சீனாவின் சுங்க துறையின் பொது நிர்வாகத்தின் தரவுகள் படி இதே காலகட்டத்தில் இந்தியாவிற்கான ஏற்றுமதி பொருட்களின் மொத்த மதிப்பு 89.99 பில்லியன் டாலராக உள்ளது.
10 பில்லியன் டாலர் பொருட்கள்
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்குச் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிப்பின் இடைவெளி அதிகரித்து வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது கூறப்பட்டு உள்ள காரணத்தால் அடுத்த வருடத்திற்கான மார்கெட்டிங் மற்றும் அப்ரேஷன்ஸ் பிரிவுக்கான செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications