கனரக மற்றும் பாதுகாப்புத் துறை வாகனங்களுக்கான ப்ரோபெல்ஷன் மற்றும் ஹெவிடியூட்டி ஆட்டோமேட்டிங் டிரான்ஸ்மிஷன் கட்டமைப்பை உருவாக்கும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி நிறுவனமான அலிசன் டிரான்ஸ்மிஷன், சென்னையில் உள்ள தனது உற்பத்தி வசதியை விரிவுபடுத்த மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இந்த விரிவாக்கம் திட்டம் பல ஆண்டுகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அலிசன் டிரான்ஸ்மிஷன் அடுத்த சில வருடத்தில் சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்ய உள்ளது.

இந்த புதிய முதலீடு மற்றும் விரிவாக்கம் மூலம், சென்னை உற்பத்தி தளத்தின் திறன் இரட்டிப்பாகும். இந்த 200,000 சதுர அடி விரிவாக்கத் திட்டம் 2025 இல் நிறைவு பெற்று 2026 இல் செயல்படத் தொடங்கும். 2027 ஆம் ஆண்டில் முழு உற்பத்தித் திறனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கம், அலிசன் நிறுவனத்தின் ஆன்-ஹைய்வே ஆட்டோமேட்டிங் டிரான்ஸ்மிஷன் போர்ட்போலியோ-வை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது. தமிழ்நாடு ஆட்டோமொபைல் நகரமாக இருக்கும் வேளையில் இத்துறையில் கனரக வாகனங்கள் முதல் எலக்ட்ரிக் வாகனம் முதல் அனைத்து பிரிவுகளிலும் முதலீடு குவிந்து வருகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் முதலீடுகளில் பெருமளவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் என்பதால், வலிமையான விரிவாக்கத்தைத் தமிழ்நாடு பதிவு செய்து வருகிறது.
1915 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலிசன் டிரான்ஸ்மிஷன், அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள இந்தியானாபோலிஸில் தலைமையிடமாகச் செயல்படுகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் இந்த நிறுவனம், நெதர்லாந்து, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பிராந்திய தலைமையகங்களைக் கொண்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் இந்தியாவில் உற்பத்தி வசதிகளையும், இந்தியானாபோலிஸ், ஆர்பர்ன் ஹில்ஸ், மிச்சிகன் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் electrification engineering centres-களையும் கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications