இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் ஆர்பிஐ மக்களின் சேமிப்பு குறைந்து, பாதுகாப்பற்ற கடன் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை மணி அடித்து வருகிறது.
இதேவேளையில் இந்தியாவின் பின்டெக் சேவையும், நிதியியல் சார்ந்த தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபலமான கிரெடிட் கார்டு நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிர்ஸ் இந்திய சந்தைக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மெகா அலுவலகத்தைத் திறந்துள்ளது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவில் தனது உலகளவில் மிகப்பெரிய வளாகத்தைத் திறந்துள்ளது. சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகம் குருகிராமின் செக்டார் 74 ஏ பகுதியில் அமைந்துள்ளது.
இப்புதிய அலுவலகத்திற்கு வருகிற மே 2024 முதல் பகுதி பகுதியாக பிற அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களை மாற்ற உள்ளதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. புதிய மற்றும் தனக்கே உரிய கேம்பஸ்-க்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மாறுவது மூலம் பல பணிகளையும், சேவைகளையும், பிரிவுகளையும் மேம்படுத்த உள்ளது.
கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் (BD+C) கோர் மற்றும் ஷெல் மேம்பாடுக்கான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இப்புதிய கேம்பஸ் Leadership in Energy and Environmental Design (LEED) அமைப்பிடம் இருந்து தங்க சான்றிதழை பெற்றுள்ளது.
மே மாத இறுதியில் இருந்து படிப்படியாக ஊழியர்கள் இந்த புதிய வளாகத்திற்கு இடம் பெயரவுள்ள நிலையில், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமல்லாமல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவையும் இந்தியாவில் இருந்தே இந்த கேம்பஸ் ஆதரிக்கும் வகையில் இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளது.
குருகிராமில் உள்ள இந்த புதிய கேம்பஸ் தவிர அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய இடங்களிலும் இந்நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன.
இந்த வளாகம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உலகளாவிய அளவில் மிகப்பெரிய வளாகமாகும். இந்த வளாகம் சுற்றுச்சூழல் நட்பு சார்ந்த கட்டிட கலைக்கான தங்க சான்றிதழ் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது டெலிவரி சென்டரை திறந்து வரும் இக்காலக்கட்டத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்-ன் இந்த வளாகம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிரிவுகளுக்கும் ஆதரவு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications