சென்னை: அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏசிவி என்ற முன்னணி டிஜிட்டல் ஆட்டோடெக் நிறுவனம் சென்னையில் புதிய டெவலப்மெண்ட் சென்டரை திறந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள ஏசிவி நிறுவனம், கனடாவிலும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடம் என பெயர் பெற்றுள்ள ஏசிவி சென்னையில் அதன் கிளையை திறந்துள்ளது.

ஏசிபி இந்தியா டெவலப்மெண்ட் சென்டர் துவக்கம், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய உதவும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் உயர்திறன் கொண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என ஏசிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த துறைக்கான சந்தை என்பது வளர்ந்து வருகிறது, எனவே ஏசிவி நிறுவனம் அதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் தனது மையத்தை நிறுவியுள்ளது என கூறியுள்ளது. சென்னையில் நிறுவப்படும் ஏசிவி இந்தியா மேம்பாட்டு மையம் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் ,தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் என தலைமை செயல் அதிகாரியான ஜார்ஜ் சவுமன் தெரிவித்துள்ளார்.
ஏசிவி இந்தியாவின் தலைமை பொறுப்பு ஏற்றிருக்கும் சதீஷ் வைத்தியநாதன் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் ஏசிவி நிறுவனத்தின் மையம் நிறுவப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்தியாவில் ஒரு திறமை மிக்க குழுவினரைக் கொண்டு நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த ஓராண்டு காலத்திற்குள் நூற்றுக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு அமர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, தரவு சேவைகள் மற்றும் பிற முக்கிய துறைகளில் ஒருங்கிணைந்த பல்வேறு தொழில்நுட்ப தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர். ஜாவா, டாட் நெட், சேல்ஸ் ஃபோர்ஸ்,பைத்தான், ஜே எஸ், ரியாக்ட் , ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, டேட்டா பேஸ் ஆகிய தொழில்நுட்பங்களுக்கான பதவிகளும் நிரப்பப்பட உள்ளன.
தற்போது மென்பொருள் மேம்பாட்டாளர் ,பேக் எண்ட் வெப் மற்றும் மொபைல் ஃபிரண்ட் ஆகிய பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு www.acvauctions.com/careers-acv-india என்ற தளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications