இந்தியா முதல் அமெரிக்கா வரையில் பணியிடத்தில் நடக்கும் கடுமையான நிர்வாக முறை குறித்து சமுகவலைத்தளம் முதல் லின்கிடுஇன் வரையில் அதிகளவில் விவாதம் நடந்து இதே நேரத்தில், நாரணயமூரத்தி போன்ற மூத்த தொழிலதிபர்கள் வாரத்திற்கு 70 மணிநேரமும், சில இளம் ஸ்டார்ட்அப் முதலாளிகள் வாரம் 84 மணிநேரம் வரையில் ஊழியர்களை பணியாற்ற வற்புறுத்தி வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் ஒரு படிக்கு மேலாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்தின் சிஇஓ, 99 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிறுவனம் இசைக்கருவிகளுக்கான ஒரு ஈகாமர்ஸ் தளத்தை நடத்தி வருகிறது. பிலாட்வின் என்ற இந்த நிறுவனத்தின் சிஇஓ திடீரென நிறுவனத்தின் ஸ்லாக் சேனலில் ஒரு கோபமான செய்தியை வெளியிட்டு 111 பேர் கொண்ட நிறுவனத்தில் வெறும் 11 பேரை மட்டும் வைத்துக்கொண்டு 99 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த செய்தி வந்த நாளில் தான் இந்நிறுவனத்தில் சில இன்டர்ன் ஊழியர்கள் பணிக்கு சேர்ந்துள்ளது. இவர்கள் பணிக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெரும்பாலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் Reddit தளத்தின் வாயிலாக பகிரப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் சிஇஓ பிலாட்வின் அன்று காலை அனைத்து ஊழியர்களையும் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த விர்ச்சுவல் கூட்டத்திற்கு வெறும் 11 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் மற்ற அனைவரையும் பணிநீக்கம் செய்வதாக காரசாரமான விமர்சனத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் ஸ்லாக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பணிநிக்கம் குறித்து அறிவித்துள்ளார்.
பிலாட்வின் தனது மெசேஜில் "இன்று காலை விர்ச்சுவல் கூட்டத்திற்கு வராதவர்களுக்கு இது உங்களுடைய அதிகாரப்பூர்வ நோட்டீஸ்: நீங்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்" என்று கூறியுள்ளார்.

"110 பேரில் 11 பேர் மட்டுமே இன்று காலை வந்திருந்தார்கள். அந்த 11 பேரும் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றலாம், மற்றவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இப்போதே என் பிஸ்னஸ்-ஐ விட்டு வெளியேறுங்கள்," என்று அவர் கடுமையான உத்தரவிட்டுள்ளார்
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் சிஇஓவின் செயல்பாட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சிலர் கூட்டம் குறித்து ஊழியர்களுக்கு முறையான முன்அறிவிப்பு வழங்கப்படாததால் இப்படியொரு மோசமான நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications