தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் காரணத்தால் வெளிநாட்டு ஐடி சேவை நிறுவனங்கள் சென்னையை மட்டுமே நம்பியிருக்காமல் தற்போது கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டத்தில் புதிய அலுவலகத்தை திறப்பது மட்டும் அல்லாமல் அப்பகுதி பட்டதாரிதளையே பணியில் அமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் பின்னாக்கல் நிறுவனத்தின் மாபெரும் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இயங்கி வரும் 2 முன்னணி நிறுவனங்கள் மதுரையில் தனது அலுவலகத்தை திறந்துள்ளது. இது இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.

அமெரிக்காவில் டெலாவேர் பகுதியை தலைமையிடமாக கொண்டு கட்டுமான மாடலிங் மற்றும் கட்டமைப்பு ஸ்டீல் டீடைலிங் சேவை நிறுவனமான "கேட்மேன்" (CadMan) மதுரையில் பிரபலமான தயா சைபர் பூங்காவில் தங்களுடைய டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது. தயா சைபர் பார்க்-ல் அடுத்தடுத்து சில ஐடி சேவை நிறுவனங்கள் வர உள்ளது.
இதே தயா சைபர் பார்க்-ஸ் அமெரிக்காவின் நியூயார்க்-ஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி உலகளாவிய டிஜிட்டல் சேவைகள் மற்றும் தீர்வுகள் வழங்கும் நிறுவனமான Presidio தங்களுடைய அலுவலகத்தை திறந்துள்ளது.
இதை தொடர்ந்து அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆடிட்டிங் சேவை நிறுவனமான சிகிச் (Sikich), கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை திறந்து செயல்படத் தொடங்குவதன் மூலம் இந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்பு Sikich நிறுவனம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை வைத்திருக்கும் வேளையில் கோயம்புத்தூரில் 3வது அலுவலகத்தை திறந்துள்ளது.
Sikich நிறுவனம் தனது முக்கிய கூட்டணி நிறுவனமான அகோடீடியா டெக்னாலஜிஸ் (Acodeidea Technologies) இது கோவையை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாகும், இந்நிறுவனத்தை தன்னுடன் முழுமையாக இணைத்தது மூலம் கோவை அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications