சென்னைக்கு யோகம் தான்.. தேடி வந்த மகாலட்சுமி..!!

இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டின் மீது சர்வதேச நிறுவனங்களுக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. சென்னை, பெரமலூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, ஓசூர் என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முதலீடுகளைக் குவித்து வருகிறது. இந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபலமான ஸ்மார்ட்போன் கண்ணாடி நிறுவனமான கார்னிங் அறிவித்த முதலீடு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான கார்னிங் இன்க் (Corning Inc) மற்றும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் ஆகியவை இணைந்து, "பாரத் இனோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் (BIG Tech)" என்ற புதிய தொழிற்சாலைக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னைக்கு யோகம் தான்.. தேடி வந்த மகாலட்சுமி..!!


இந்த தொழிற்சாலை, மொபைல் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கவர்கிளாஸ்களை தயாரிக்கும். இது நாட்டிலேயே முதல் முறையாகத் துவங்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தொழிற்சாலை என்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் கார்னிங் தான் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கண்ணாடி தேவையை இந்த தொழிற்சாலை பூர்த்தி செய்யும், இதன் மூலம் இறக்குமதி செய்யும் பணிகளை இனி குறையும். ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற 10க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கண்ணாடி வழங்கும் முன்னணி நிறுவனம் கார்னிங் விளங்குகிறது.

சென்னை தொழிற்சாலைக்கு கார்னிங் மற்றும் ஆப்டிமஸ் இணைந்து சுமார் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுதோறும் 3 கோடி கவர்கிளாஸ்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் கொண்டது.

தமிழ்நாடு அரசுடன் கார்னிங் மற்றும் ஆப்டிமஸ் கூட்டணி ஜனவரி மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலக்கட்ட ஒப்புதல்கள், ஆய்வுகளுக்குப் பின்பு தற்போது 1000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையைக் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டு உள்ளது.

“கார்னிங் இன்க் மற்றும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனங்களை உலகத் தரம் வாய்ந்த தொழிற்சாலையைச் சென்னை பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் கட்டப்படுவது தமிழ்நாட்டுக்குப் பெருமை,” என்று தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

“பாரத் இனோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் (BIG Tech) நிறுவனத்தின் பூமி பூஜை, மாநிலத்தின் தொழில்துறை திறன்களுக்கு புதிய அடையாளமாக விளங்குகிறது, அதே போல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான மையப்புள்ளியாகத் தமிழ்நாடு விளங்குகிறது” என்றும் முதலமைச்சர் கூறினார்.

சென்னைக்கு யோகம் தான்.. தேடி வந்த மகாலட்சுமி..!!

இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கத்தில் கார்னிங் தொழிற்சாலையின் பூமி பூஜையில் பங்கேற்றார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்த முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல முயற்சிகள் எடுத்து வரும் வேளையில், இந்த வருடம் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டம், டாவோஸ்-ல் நடந்த உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசு சார்ப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் தெலுங்கானா அரசு அமெரிக்காவின் Corning Inc நிறுவனம் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், அடுத்த சில வாரத்திலேயே தெலுங்கானா எல்லாம் நமக்குச் சொட்டாகாது என முடிவு செய்துவிட்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+