இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி-க்கு அடுத்தடுத்துக் குட் நியூஸ் வந்துக்கொண்டே இருக்கிறது, இதனால் அதானி குழும முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை வெளியிட்டதில் இருந்து தொடர் பிரச்சனைகளை மட்டுமே அதானி குழுமம் எதிர்கொண்டு வருகிறது. இதனால் கௌதம் அதானி சொத்து மதிப்பு சரிவது உடன், முதலீட்டாளர்களின் மதிப்பும் சரிந்து வந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் விவகாரம் தொடர்பான விசாரணையில் சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பி இந்த வழக்கில் செபி அமைப்பின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று கூறியது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக தற்போது மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் அமெரிக்க ஷாட் செல்லரான ஹிண்டன்பேர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமம் தொடர்பாக முன்வைத்த கார்ப்பரேட் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக இல்லை என்று அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்த பின்பு தான் இலங்கையில் துறைமுகத்தை அமைக்கும் கூட்டணி முயற்சிக்கு 553 மில்லியன் டாலர் வரை கடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையின் வாயிலாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தது.
இதனால் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் அல்லது DFC மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து, அதானி குழுமத்தை விசாரணை செய்த பின்பு தான் கடன் அளிக்கப்பட்டது என அமெரிக்க ஏஜென்சியின் மூத்த அதிகாரி ஒருவர் ப்ளூம்பெர்க் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்திற்குப் போதுமான நம்பிக்கை கிடைப்பதை உறுதி செய்யப்பட்ட பின்பு தான் கடன் அளிக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகள் எதுவும் அதானி போர்ட்ஸ் & SEZ மற்றும் இலங்கை திட்டத்தைச் செயல்படுத்தும் கிளை நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்பு தான் கடன் கொடுத்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா - அமெரிக்கா கூட்டணி, அந்நாட்டில் அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுப்பதாக நவம்பர் மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது.


Click it and Unblock the Notifications