நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் 2024 ஆம் நிதியாண்டில் 1- 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் இன்போசிஸ் நிறுவனம் இந்த வருடம் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவ் செல்லவில்லை என அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் இதற்கு முக்கிய காரணமாக நிறுவனத்தில் அளவுக்கு அதிகமாக பிரஷ்ஷர்கள் இருப்பதாகவும், இதோடு அமெரிக்கா போன்ற முக்கிய வர்த்தக சந்தையில் மந்த நிலை உருவாகியிருப்பதை காரணமாக கூறுகிறது. இன்போசிஸ் இந்த அறிவிப்பால் பட்டதாரிகள் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் சென்னையில் Ensono நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தொழில்நுட்பத்தில் IT சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருக்கும் Ensono 2023 ஆம் ஆண்டில் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறும் திறமையான பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதன் மூலம் சென்னை அலுவலகத்தில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் என்சோனோ, விப்ரோவின் டேட்டா சென்டர் வணிகத்தை கைப்பற்றியதன் மூலம் 2018 இல் இந்தியாவில் நுழைந்தது. இந்தியாவுக்கு வந்த புதியதில் என்சோனோ புனேவில் சுமார் 400 அசோசியேட் ஊழியர்கள் கொண்ட குழுவுடன் தனது வர்த்தகத்தை பெரும் நம்பிக்கை உடன் துவங்கியது.
இன்று என்சோனோ புனே, சென்னை மற்றும் பெங்களூரு என 3 நகரங்களில் சுமார் 1,500 ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. என்சோனோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாரம்பரிய தொழில்நுட்ப சேவைகளை (legacy technologies) இயக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. இதோடு பழைய தொழில்நுட்பத்தில் இருந்து கிளவுட் சேவைக்கு மாற்றும் முக்கியமான சேவைகளையும் அளிக்கிறது.
சமீபத்தில் புனேவில் சுமார் 30 பிரஷ்ஷர்களை பணியமர்த்தியதாகவும், இதை தொடர்ந்து சென்னையிலும் பட்டதாரி மாணவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம் என என்சோனோ நிறுவனத்தின் CEO ஜெஃப் வான் டெய்லன் கூறினார்.
மேலும் அவர் என்சோனோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் சுமார் 12% வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. மேலும் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்தி சப்ளை - டிமாண்ட் பூர்த்தி செய்ய இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கையை 10% - 15% வரம்பில் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக ஜெஃப் வான் டெய்லன் கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தை போல் 20000 - 40000 பேருக்கு ஒரு வருடத்தில் வேலைவாய்ப்புகளை கொடுக்க முடியாவிட்டாலும், என்சோனோ மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications