தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார பகுதியாக விளங்கும் கொங்கு மண்டலம், ஆதிகாலம் தொட்டு தொழிற்துறை நகரமாக இருந்தாலும், கடந்த 15 வருடத்தில் மோட்டார் வொர்க்ஸ், டெக்ஸ்டைல் தாண்டி பாதுகாப்பு துறை, ஏரோஸ்பேஸ் உட்பட பல துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேவேளையில் மார்ட்ன் உற்பத்தி துறைக்கு இணையாக டெக் மற்றும் ஐடி சேவை துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவிலேயே வேகமாக வளரும் 2ஆம் நிலை ஐடி மற்றும் டெக் நகரங்களில் முன்னோடியாக கோயம்புத்தூர் விளங்கி வருகிறது. கோயம்புத்தூர் மற்றும் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்திற்கும் கைகொடுக்கும் வகையில் தினமும் ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனமோ அல்லது உள்நாட்டு நிறுவனமோ தனது அலுவலகத்தை கோயம்புத்தூரில் அமைத்து வருகிறது.

அந்த வகையில் 2 அமெரிக்க நிறுவனம் கடந்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூரில் அலுவலகத்தை அமைத்துள்ளது. இது கோவை டெக் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக விளங்கும் அளவுக்கு உள்ளது.
முதல் நிறுவனம்: கலிபோர்னியா தலைமையிடமாக கொண்ட AI டேட்டா சொல்யூஷன்ஸ் நிறுவனமான iMerit Technology, கோவையில் ஒரு புதிய, முன்னணி ஆட்டோமொட்டிவ் AI சிறப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய மையம், குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் AI மாடல்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டு உள்ளது.
இந்த iMerit Technology அலுவலகத்தை கோயம்புத்தூரில் தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். கோயம்புத்தூரில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறமைகளை பயன்படுத்தும் வகையில் கலிபோர்னியா-வின் iMerit Technology தனது அலுவலத்தை திறந்துள்ளது.
2வது நிறுவனம்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிதி சேவைகள் பிரிவில் பெரும் தலையாக இருக்கும் State Street நிறுவனம் கோயம்புத்தூரின் பிரபல KGISL SEZ டெக் பார்க்கில் தனகு புதிய அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனம் நேரடியாக கோயம்புத்தூர் போன்ற நகரத்தில் சொந்தமாக அலுவலகத்தை திறப்பது எல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வெறும் கனவு, ஆனால் இன்று எளிதான விஷயமாக உள்ளது.
State Street நிறுவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தில் சுமார் 2,400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சென்னையில் புதிய அலுவலகத்தை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது, இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை பலப்படுத்த State Street நிறுவனம் தீவிரமாக உள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த முதலீடுகள், கோவை AI மற்றும் நிதி சேவைகளுக்கான டிமாண்ட் மற்றும் இத்துறையில் கோவையில் அதிகப்படியான திறமை வாய்ந்த ஊழியர்கள் இருப்பதை காட்டுகிறது. இதன் மூலம் கோவை தொழில்நுட்ப துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
கோவையில் அதிகப்படியான நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் வரும் வேளையில் அலுவலக இடங்களுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக, டெக் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை கோயம்புத்தூரில் விரிவாக்கம் செய்ய விரும்பும் முக்கியமான இடமாக மாறி வருகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications