இந்தியாவில் வேகமாக வளரும் நகரங்களில் முக்கியமானதாக விளங்கும் சென்னையில் முதலீடு செய்யவும், விரிவாக்கம் செய்யவும் உள்நாட்டு நிறுவனம் முதல் வெளிநாட்டு நிறுவனம் வரையில் போட்டிப்போட்டு வருகிறது.
இந்த வேளையில், அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று, சென்னை நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்திய அளவில் கண் மருத்துவம் துறையில் தரமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் மாபெரும் நிறுவனமான அப்பாசாமி அசோசியேட்ஸ்-ல், உலகளவில் முன்னணி முதலீட்டு நிறுவனமாக விளங்கும் வார்பெர்க் பின்கஸ் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கண் மருத்துவ உபகரண உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது அப்பாசாமி அசோசியேட்ஸ். இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் வார்பெர்க் பின்கஸ்-ன் முதலீடு ஒரு மைல் கல் ஆகும்.
1978 ஆம் ஆண்டு முதல் கண் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அப்பாசாமி அசோசியேட்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய கண் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான லென்ஸ் (Intra Ocular Lens - IOL) தயாரிப்பாளர் ஆகும்.
மேலும் இந்நிறுவனம் நோய் கண்டறிதல் உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் IOLs என கண் மருத்துவம் துறையின் முழு மதிப்பு சங்கிலியில் அப்பாசாமி அசோசியேட்ஸ் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, 1978 ஆம் ஆண்டில் ரூ.1800 என்ற மலிவு விலையில் இந்தியாவின் முதல் கிரையோ அறுவை சிகிச்சை உபகரணத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், கண் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது அப்பாசாமி அசோசியேட்ஸ். இதற்கு முன்பு, இதன் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணம் விலை ரூ.20,000 வரை இருந்தது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான வார்பெர்க் பின்கஸ், அப்பாசாமி அசோசியேட்ஸில் பெரும் பகுதி பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளது. சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அப்பாசாமி நிறுவனம் ரூ.3000-3200 கோடி மதிப்பீட்டில் 60-70% பங்குகளை வாங்க வார்பெர்க் பின்கஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குப் பங்குகளை கைப்பற்றிய பின்பும் தற்போது இருக்கும் நிர்வாக குழு, சிஇஓ செந்தில்குமார் ஆகியோர் தொடர்ந்து நிர்வாகத்தை நடத்த வார்பெர்க் பின்கஸ் விரும்புவதாகத் தெரிகிறது.
இந்தியா உலகளவில் மிகப்பெரிய கண் பராமரிப்பு சந்தைகளில் ஒன்றாகும், ஒவ்வொரு ஆண்டும் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு இந்தியாவில் நடக்கிறது.
சமீபத்தில், கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து நிலுவையில் உள்ள குறைந்தது 10 மில்லியன் கண்புரை அறுவை சிகிச்சைகளின் பின்னடைவைத் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் கண் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை மொத்தம் 27 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய பிராண்டுகளில், அப்பாசாமி சுமார் 75% சந்தைப் பங்கைக் கொண்டு சந்தையில் முன்னணியில் உள்ளது. இப்பிரிவில் மற்ற முன்னணி இந்திய பிராண்டுகள் ஆரோலாப் மற்றும் ஐயோகேர் ஆகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications