தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தில் நேற்று JABIL நிறுவனத்துடனான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம், திருச்சியின் அடையாளத்தையே மாற்றப்போகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? சென்னை, ஓசூரில் உருவான விஸ்வரூப வளர்ச்சியை தற்போது திருச்சியில் உருவாக்க ஸ்டாலின் அரசு வித்திட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் முக்கியமான துறையாக மாறியுள்ளது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தித் துறை. தமிழ் மண்ணில் ஏற்கனவே ஐபோன் முதல் பிக்சல் போன் வரை, லெனோவோ லேப்டாப் முதல் கிளவுட் மற்றும் டெலிகாம் கருவிகளைச் சென்னை மற்றும் ஓசூரில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் சென்னை மற்றும் ஓசூர் மாநிலத்தின் எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டராக உள்ளது, இந்த நிலையில் உலகளவில் இருக்கும் டிமாண்டுக்கு ஏற்ற வகையில் தமிழ்நாட்டில் 3வது எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் உருவாக்கும் திட்டம் தான் இந்த JABIL நிறுவனத்தின் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம்.
திருச்சி என்றால் பாயிலர், மின்சார உபகரணங்கள், கனரக இன்ஜினியிரிங் பொருட்கள், ஆட்டோமொபைல், FMCG துறை தான் அதிக பங்கீட்டை வகித்து வந்தது. ஆனால் இனி வரும் காலத்தில் திருச்சியின் அடையாளம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான சந்தையாக மாற உள்ளது.
அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி JABIL நிறுவனம் 2000 கோடி ரூபாயை திருச்சியில் முதலீடு செய்து புதிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இந்த தொழிற்சாலை ஜாபிள் நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி போன் 300க்கும் அதிகமான உலகளாவிய பிராண்டு வாடக்கையாளர்களுக்குத் தேவையான கருவிகளையும், உதிரிப்பாகங்களையும் தயாரிக்க உள்ளது.
சென்னையில் பாக்ஸ்கான், பெகாட்ரன், கார்னிங் போன்றவையும், ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் 3வது கிளஸ்டராக திருச்சி உருவாக உள்ளது. Jabil வருகை மூலமாக அடுத்தடுத்து அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் திருச்சிக்கு வருவதற்கு ரோடுமேப் போடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் திருச்சி இனி அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கான ஹப் ஆக மாறுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் திருச்சியில் 2 சிப்காட் பகுதிகள் வேக வேகமாக தயாராகி வருகிறது.
இதேவேளையில் திருச்சியில் தற்போது இயங்கி வரும் பல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிறுவனம் CISCO நிறுவனத்திற்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications