பிரதமர் அமெரிக்க பயணம் மேற்கொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் சிப் துறை தொழிற்சாலையான Micron இந்தியாவில் 2.7 பில்லியன் டாலர் தொகை முதலீட்டில் அமைக்கப்படும் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைக்கு மோடி அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அரசு தற்போது ஒப்புதல் கொடுத்துள்ள திட்டத்தின் வாயிலாக சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அரசு தனது செமிகண்டக்டர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சில முக்கிய மாற்றங்களை செய்து, மானியங்களை அதிகரித்த பின்பு மைக்ரான் நிறுவனத்தின் 2.7 பில்லியன் டாலர் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் டெஸ்டிக் மற்றும் பேகேஜ் யூனிட் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மாபெரும் தொழிற்சாலை குஜராத்-ல் அமைய உள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அறிவிக்கும்.
மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் OSAT நிறுவனத்தை அமைக்க உள்ளது. இதன் பணி என்ன..? முக்கியத்துவம் என்ன..? செமிகண்டக்டர் தொழிற்சாலை சிலிக்கான் வேப்பர் தயாரித்த பின்பு அதை ஸ்லைஸ் செய்த பின்பு. இந்த OSAT தொழிற்சாலையில் தான் சிப்களாக கட் செய்து, பேகேஜ் செய்து, டெஸ்ட் செய்யப்படும்.
இந்தியாவில் OSAT நிறுவனங்கள் துவங்கப்பட்டால் வெளிநாட்டில் இருந்து சிலிக்கான் வேப்பர்-களை இறக்குமதி செய்து, இந்திய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப செமிகண்டக்டர் சிப் தயாரிக்க முடியும்.
மத்திய அரசு தனது முதல் கட்ட ஒப்புதலில் OSAT பிரிவில் டாடா குரூப் மற்றும் Sahasra Semiconductors ஆகிய இரு நிறுவனங்கள் இப்பிரிவு தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றது. இதில் Sahasra Semiconductors விரைவில் தனது உற்பத்தி பணிகளை துவங்க உள்ளது. டாடா குழுமம் தனது OSAT தொழிற்சாலைக்கான இடத்தை ஓசூர் மற்றும் கோயம்புத்தூரில் இடத்தை தேடி வருகிறது.
டாடா விரைவில் OSAT பிஸ்னஸ் துவங்க உள்ள நிலையில், இதே துறையில் அமெரிக்காவின் மைக்ரான் தற்போது 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிற்சாலையை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது மூலம் டாடா குழுமத்திற்கு கடுமையான போட்டியாக மைக்ரான் விளங்கும்.
செம்கண்டக்டர் துறையில் பொதுவாக ஒரு டெஸ்டிங் தளத்தை அமைக்க 5 பில்லியன் டாலர் அளவிலான தொகை தேவைப்படும், 5 பில்லியன் டாலர் எனில் கிட்டத்தட்ட 40000 கோடி ரூபாய். இதுவே செம்கண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலை எனில் 10 முதல் 15 பில்லியன் டாலர் தேவைப்படும். அதாவது 80000 முதஸ் 120000 கோடி ரூபாய் வரையில் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications