இந்திய ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ஆடம்பர ரியல் எஸ்டேட் துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் Rently என்னும் ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி நிறுவனம் தனது டெக் சென்டரை கோயம்புத்தூரில் திறந்துள்ளது.
உலகளவில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள் இந்தியாவில் ஆர்வமாக டெக்னாலஜி சென்டர் மற்றும் டெலிவரி சென்டர்களை திறந்து வரும் வேளையில், தற்போது சிறிய மற்றும் நடுத்தர டெக் நிறுவனங்களும் இந்தியாவில் தனது டெக் சென்டரை விரிவாக்கம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் செல்ஃப் டூரிங் மற்றும் ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி பிரிவில் முன்னோடியாக இருக்கும் Rently, கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தை பிரபலமான ரத்தினம் டெக்சோன் பகுதியில் திறந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 280 பேர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rently நிறுவனம் உலகளவில் அதிநவீன பார்ப்பெர்டி டெத் சேவைகளை வாடிகை வீடுகளுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் அளிக்கிறது. இந்நிறுவனம் வன்பொருள் மற்றும் அதிநவீன சாப்ட்வேர் தளத்துடன் இணைத்து புதிய டெக் சேவை ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்குகிறது.
சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் கோயம்புத்தூர்-ல் குவிந்து வரும் வேளையில் வென்சர் பண்ட் நிறுவனங்கள் கோயம்புத்தூர்-ல் அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது. இதன் அடிப்படையில் Java Capital என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனம் முதல் முறையாக கோயம்புத்தூர்-ல் அலுவலகத்தை கடந்த மாதம் துவங்கியுள்ளது.
இதன் மூலம் கோவையில் சுற்றியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இனி வென்சர் கேப்பிடல் சமுகத்தில் தனி கவனத்தை பெற வாய்ப்புகள் உள்ளது. கோயம்புத்தூரில் Java Capital நிறுவனம் SAAS, டீப் டெக், கிளைமேட் டெக் துறை சார்ந்த நிறுவனத்தில் ப்ரீ சீட் முதலீடாக செய்ய உள்ளது. பிற சீட் ஸ்டேஜ் முதலீடுகளில் முன்பு பங்குபெற்ற நிறுவனங்கள் அடிப்படையில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications